Home விளையாட்டு விடாது கருப்பாக இந்திய அணியை துரத்தும் காயம்; அடுத்த போட்டியில் யாருக்குப் பதில் யார்?

விடாது கருப்பாக இந்திய அணியை துரத்தும் காயம்; அடுத்த போட்டியில் யாருக்குப் பதில் யார்?

இந்திய அணி வீரர்களை விடாது கருப்பாக காயம் துரத்திக்கொண்டே இருக்கிறது. டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே மெயின் பவுலர் இஷாந்த் சர்மா காயத்தால் விலகினார். அடுத்ததாக முகமது ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுல் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. வேறு எந்தத் தொடரிலும் வரிசையாக இத்தனை வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

உச்சமாக மூன்றாவது டெஸ்டில் பிளேயிங் லெவனில் இருந்த பாதிக்குப் பாதி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டனர். ஒட்டுமொத்த இந்திய அணியே காயத்தோடு தான் ஆட்டத்தை மேனேஜ் செய்தது. இதுக்கு மேல பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் பேட் கட்டி களத்தில இறங்குனும் என ரசிகர்கள் நொந்துவிட்டார்கள். வரலாற்று டிரா செய்த விஹாரியும் அஸ்வினும் கூட வலிகளைப் பொறுத்துக்கொண்டு தான் ஆடினார்கள்.

ஜடேஜாவின் இடது கை பெருவிரலில் எலும்பு இடம்பெயர்ந்ததால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பவுலிங் செய்யமுடியவில்லை. இது அணிக்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்தது. இந்தக் கொடுமையெல்லாம் ஒருபுறம் என்றால் பிரதான பவுலர் பும்ரா ஆட்டத்தில் அடிக்கடி வயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை பெவிலியன் திரும்பி மருத்துவ உதவியையும் பெற்றுவந்து மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

இதற்குக் காரணம் அவர் அதிக ஓவர்களைப் பந்துவீசியது தான். இரு அணி பவுலர்களையும் ஒப்பிடுகையில் பும்ராவே அதிகப்படியான ஓவர்களை வீசியிருக்கிறார் (117.4 ஓவர்கள்). இதனால் அவரை ஓய்வெடுக்கும்படி மருத்துவக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. எனவே, ஜனவரி 15இல் நடைபெறவிருக்கும் பிரிஸ்பேன் போட்டியில் அவரால் ஆட முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பும்ரா விலகும் பட்சத்தில் முகம்மது சிராஜ் பவுலிங்கைத் துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சைனியும் அறிமுக வீரர்களாக ஷர்துல் தாகுர் அல்லது நடராஜன் பந்துவீசுவார்கள் என்று கூறப்படுகிறது. வார்ம்-அப் ஆட்டத்தில் களமிறங்கிய கார்த்திக் தியாகியையும் அறிமுக வீரராகக் களமிறக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

அதேபோல பேட்டிங்கில் விஹாரிக்குப் பதிலாக மயங்க் அகர்வால் அல்லது பிரித்வி ஷா களமிறக்கப்படுவார்கள். ஆல்ரவுண்டர்களான அஸ்வின், ஜடேஜா இருவரும் 15ஆம் தேதிக்குள் ஆடுவதற்கு உடல் ஒத்துழைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

ஒருவேளை அவர்கள் ஆடவில்லையென்றால் குல்தீப் யாதவ், வாசிங்டன் சுந்தர் ஆகியோரை விளையாட வைக்க முடிவெடுத்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், ரிஷப் பண்டும் காயத்துடன் தான் சிட்னி டெஸ்டில் ஆடினார். அவர் ஆடுவதும் சந்தேகமே. அவருக்குப் பதில் விருத்திமான் சஹா உள்ளே வரலாம்.

ஏற்கனவே, அனுபவமில்லாத வீரர்கள் இல்லாமல் ஆடிக்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு பிரிஸ்பேன் டெஸ்ட் இதுவரை கண்டிராத சவாலாகவே இருக்கும். குறிப்பாக, பிரிஸ்பேனில் அவ்வளவு எளிதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட முடியாது.

வார்னர் திரும்பியிருப்பது, இளம் வீரர் புக்கோவ்ஸ்கி சிறப்பான ஆட்டம் என ஆஸ்திரேலியாவுக்கு பாசிட்டிவான விஷயங்கள் நடந்துவருகின்றன. கடைசி இரண்டு போட்டிகளிலும் பல்வேறு சவால்களை வென்று முத்திரை பதித்த ரஹானே அண்ட் கோ இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வென்றுவிட்டால் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

சார்வரி வருடம் I தை 14 I புதன் கிழமை I ஜனவரி 27, 2021 இன்றைய ராசி பலன்!

லாக்டவுனில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரிப்பு.. 14 கோடி ஏழைகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கலாம்

கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காலத்தில் அம்பானி உள்ளிட்ட இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதனை பிரித்து 14 கோடி ஏழைகளுக்கு தலா...

விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்தான் இந்திய குடியரசின் பலம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அவற்றை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை...
Do NOT follow this link or you will be banned from the site!