உலகின் மிக மோசமான தட்டம்மை தொற்று அதிகரிப்பு -எச்சரிக்கும் WHO

 

உலகின் மிக மோசமான தட்டம்மை தொற்று அதிகரிப்பு -எச்சரிக்கும் WHO

உலகின் மிக மோசமான தொற்று நோய்களில் ஒன்றுதான் தட்டம்மை நோய் என்று சொல்லும் உலக சுகாதார அமைப்பு, தட்டம்மையின் பாதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது என்றும் எச்சரித்திருக்கிறது.

உலகின் மிக மோசமான தட்டம்மை தொற்று அதிகரிப்பு -எச்சரிக்கும் WHO

தட்டம்மை அம்மை நோய், ஒரு வைரஸ் தொற்று. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த தொற்று எளிதில் தாக்கும் என்பதால், வயதானவர்களைவிட ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை எளிதில் தொற்றிக்கொள்கிறது. அதனால்தான் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைக் கட்டாயம் போட்டுவிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கின்றனர். குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது.

தட்டம்மை நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2018ம் ஆண்டை காட்டிலும் 2019ம் ஆண்டில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. மேலும், 2020ம் ஆண்டிலும் சரி, தற்போதைய 2021ம் ஆண்டிலும் சரி இந்நோயின் தாக்கம் குறையவே இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சியை தருகிறது.

உலகின் மிக மோசமான தட்டம்மை தொற்று அதிகரிப்பு -எச்சரிக்கும் WHO

கடந்த 2018ம் ஆண்டில் உலக அளவில் 3,60,000 பேர் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 2019ம் ஆண்டில் 4,30,000 பேர் தட்டம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உலகின் மிக வறிய நாடுகளில்தான் தட்டம்மை தொற்றினால் இறப்புகள் அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவில், தட்டம்மை பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவுக்கு இருந்தாலும், சில பகுதிகளில் இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே, இந்தத் தட்டம்மை நோய் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இதற்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசியின் பயன்கள் பற்றியும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.