• November
    13
    Wednesday

Main Area

Main



எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமைய்யா...  ஜாதக ரீதியாக யாரெல்லாம் யோகாவில் சாதிக்கலாம்?

யோகா
யோகா

சில கலைகளில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கு கிரக நிலைகளும் சாதகமாக இருக்க வேண்டும். அப்படி யோக கலையில் சிறந்து விளங்குவதற்கு ஒருவரின் ஜாதகத்தில் கட்டங்களும், கிரகங்களும் எந்தெந்த இடங்களில் இருந்தால் அவர்கள் யோகாவில் மேலும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ஆரோக்கியத்தை மூலமாக மேலும் மேன்மையுறச் செய்ய முடியும் என்பதைப் பார்க்கலாம்.

yoga

இந்த ஜாதக ரீதியிலான அமைப்பு இருப்பவர்கள் தான் யோக கலையில் சாதிக்க முடியும் என்பது கிடையாது. இந்த ஜாதக ரீதியிலான அமைப்பு பெற்றவர்களுக்கு இயல்பாகவே யோக கலை கைவரும். இவர்கள் எளிதில் யோக கலையைக் கைகொள்வார்கள். இவர்களுக்கு கிரகங்களின் நிலைகள், இந்த அரிய கலையைக் கற்பதற்கு சாதகமாக அமையும். 
1. ஒருவரின் ஜாதகத்தில் லக்னமாக மேஷமும் மூன்றாம் பாவமாக மிதுனமும் பதினொராம் பாவமாக கும்பமும் வருவதால் ஜாதகத்தில் செவ்வாய், புதன், சனி ஆகியவற்றின் தொடர்பு அவசியமாகும். இவர்களுக்கு யோக கலை எளிதில் கைவரும்.

astrology

2. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயும், புதனும், சனியும் தொடர்ப்பு பெற்றிருக்க வேண்டும்.  செவ்வாய் விளையாட்டை குறிக்கும். புதன், சுவாசத்தை குறிக்கும். சனி, எலும்பை குறிக்கும். இவற்றோடு உடம்பை குறிக்கும் சந்திரனும் தொடர்பு பெற்றிருந்தால் அவர்கள் யோக கலையில் நிபுணர்களாக திகழ்வார்கள். 
3. உடம்பை எப்படி வேண்டுமானாலும் வளையும் தன்மை கொண்ட ராகு கேதுகளின் தொடர்பு மூன்று மற்றும் பதினோராம் பாவத்திற்கு தொடர்பு பெற்றால் யோகாசனத்தில் சிறந்து விளங்குவார்கள். 
4. வளையும் தன்மை பெறுவதற்கு மூலை ராசிகளின் தொடர்பும் லக்னத்திற்கோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களுக்கோ அமைய வேண்டும். 
5. யோகா ஆசிரியர்களாக அமைய ஆறு மற்றும் பத்தாம் பாவ தொடர்போடு குரு சேர்க்கையும் பெற வேண்டும். 

yoga

6. பிரபல யோகா குருமார்களின் ஜாதகங்களில் மூலை ராசிகளில் லக்னம் அமைவது அல்லது செவ்வாயின் வீடுகளில் லக்னம் அமைவது, சனியின் வீடுகளில் லக்னம் அமைந்து செவ்வாய் உச்சம் பெறுவது போன்ற நிலைகள் காணப்படுகின்றன. மேலும் செவ்வாய் உச்சம் பெற்று நிற்பதும், சந்திரன் உச்சம் பெற்று நிற்பது ஆகியவையும் குறிப்பிடத்தக்க நிலைகளாகும். 
7. செவ்வாயின் வீடுகளை லக்னமாக பெற்றவர்களுக்கு மூன்றாம் பாவம் அல்லது பதினோறாம் பாவம் புதனின் வீடுகளாக வருவது யோகாவில் சிறக்க சிறப்பான கிரக நிலைகளாகும்.
8. யோகாசனம் கற்கவும் தொடர்ந்து செய்யவும் ஒருவர் ஜாதகத்தில் லக்னம், முயற்சி பாவம் எனப்படும் மூன்றாம் பாவம் நிறைவேற்றும் பாவமான பதிறோராம் பாவம் ஆகிவை பலமாக இருக்க வேண்டும்.

2018 TopTamilNews. All rights reserved.