தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

 

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதற்கான விடை இன்னும் சில மணி நேரங்களில் நமக்கு தெரியவரும். கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் . நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. இவர்களில் அடுத்த முதல்வர் யார் என்பது மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் சேர்த்து மொத்தம் 76 இடங்களில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ளது.இதற்கான பணியில் சுமார் 16,000 அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் மூன்று மையங்கள் உட்பட 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. புதுச்சேரி ,கேரளா, அசாம் ,மேற்கு வங்கம் ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்றே எண்ணப்படுகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வேட்பாளர்கள், வேட்பாளரின் தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இருப்பினும் அவர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ், அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவப் படையினர் ஆகியோர் குவிக்கப்பட்டுள்ளனர்.