வார்னர் இடத்தில் களம் இறங்கப்போவது யார்? – ஆசைப்படும் வீரர் இவர்தான்

 

வார்னர் இடத்தில் களம் இறங்கப்போவது யார்? – ஆசைப்படும் வீரர் இவர்தான்

ஆஸ்திரேலியா – இந்தியா ஒருநாள் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது இந்தியா. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாம் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்தார்.

வார்னர் இடத்தில் களம் இறங்கப்போவது யார்? – ஆசைப்படும் வீரர் இவர்தான்

இரு போட்டிகளிலும் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் ஓப்பனிங் இறங்கினர். செம பார்ட்னர்ஷிப் சேர்ந்து பந்துகளை விளாசி, ரன்களைச் சேர்த்தனர். முதல் போட்டியில், வார்னர் 69 ரன்களை எடுத்தார். மேலும் ஆரோன் பின்ச் விளையாட வழிகொடுத்தார். இரண்டாம் போட்டியில் 83 ரன்கள் அடித்தார். அதுவும் 77 பந்துகளில். இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெல்ல, இந்த அட்டகாசமான ஓப்பனிங் முக்கியக் காரணம்.

ஆனால், இரண்டாம் போட்டியில் டேவிட் வார்னர் காயம் அடைந்தார். அதனால், அவர் அடுத்த ஒரு நாள் போட்டியிலும், டி20 போட்டிகளிலும் ஆட முடியாது.

வார்னர் இடத்தில் களம் இறங்கப்போவது யார்? – ஆசைப்படும் வீரர் இவர்தான்
Marnus Labuschagne

வார்னர் இல்லாதது, ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. அந்த இடத்தில் யாரை இறக்கினால், ஆரோன் பின்ச்சோடு ஜோடி சேர்ந்து ஸ்கோரை 350 க்கும் அதிகமாகக் கொண்டு வர உதவுவார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் யோசித்து வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியில் மிடில் ஆர்டரில் விளையாடும் லாபுசாக்னே தனக்கு ஓப்பனிங் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டால் வார்னர் இல்லாத குறையைத் தீர்ப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிடில் ஆர்டரில் நன்றாக ஆடும் ஒருவரை ஓப்பனிங் இறக்கும் முடிவை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் எடுப்பாரா என்பது சந்தேகமே. ஸ்மித் மற்றும் பின்ச் ஜோடிதன் நாளை ஓப்பனிங் இறங்கும் என்று பலரால் கணிக்கப்படுகிறது.