CSK டீமின் அடுத்த ஆண்டு கேப்டன் யார்? – நிர்வாகம் அறிவிப்பு

 

CSK டீமின் அடுத்த ஆண்டு கேப்டன் யார்? – நிர்வாகம் அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டியிலிருந்து ஒரே கேப்டனைக் கொண்டிருக்கும் ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ்தான். அவர் மகேந்திர சிங் தோனி.

சென்னை ரசிகர்கள் தோனியை ‘தல’ என்று செல்லமாக அழைக்கும் அளவுக்கு அவரைப் பிடிக்கும். தோனிக்கும் சென்னையில் விளையாடுவதென்றால் தனி பிரியம்தான்.

CSK டீமின் அடுத்த ஆண்டு கேப்டன் யார்? – நிர்வாகம் அறிவிப்பு

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் எனப் பலராலும் கணிக்கப்பட்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், அது எந்த ஆண்டிலும் இல்லாத அளவு பிளே ஆப் சுற்றுக்கே தகுதி பெற வில்லை. ஐபிஎல் பாயிண்ட் டேபிளி பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்துள்ளது.

CSK வின் தொடர் தோல்விக்கு தோனியின் சில முடிவுகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்றும் சிலரோ, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற கீ பிளேயர்ஸ் இல்லாமல் என்னதான் செய்வார் என்று தோனியின் பக்கம் உள்ள நியாயத்தைக் கூறிவருகின்றனர்.

CSK டீமின் அடுத்த ஆண்டு கேப்டன் யார்? – நிர்வாகம் அறிவிப்பு

இந்நிலையில் தொடர் தோல்வி தந்த தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமின் கேப்டனாக இருப்பாரா என்பதே பலரின் கேள்வி. இக்கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

”ஒரு தொடரில் சரியாக ஆடவில்லை என்பதால் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடுத்த ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகத் தோனியே தொடர்வார் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதன்மூலம் சென்னை அணியின் நிர்வாகத் தரப்பில் தோனி விலக அழுத்தம் கொடுக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.