தோனியின் பிளேயிங் 11-இல் யார் இருப்பார்கள்?… கோப்பையை வெல்ல தோனியின் வியூகம் இது தான்?

 

தோனியின் பிளேயிங் 11-இல் யார் இருப்பார்கள்?… கோப்பையை வெல்ல தோனியின் வியூகம் இது தான்?

ஐபிஎல் என்றாலே நினைவுக்கு வருவது சிஎஸ்கே தான். அந்த அளவிற்கு சென்னை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஒரு டீம். சிஎஸ்கே என்றால் அடுத்து நியாபகத்து வருவது மஞ்சள் நிற ஜெர்சியுடன் சேப்பாக்கத்தில் கெத்தாக வலம் வரும் நம்ம தல தோனி தான். தோனிக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இருக்குற எமோஷனல் கனெக்ட்டிவிட்டி என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று. அதனால் தான் இரண்டு ஆண்டுகள் தடை குறித்த கேள்விக்கு தோனி உடைந்து அழுதுவிட்டார்.

தோனியின் பிளேயிங் 11-இல் யார் இருப்பார்கள்?… கோப்பையை வெல்ல தோனியின் வியூகம் இது தான்?
தோனியின் பிளேயிங் 11-இல் யார் இருப்பார்கள்?… கோப்பையை வெல்ல தோனியின் வியூகம் இது தான்?

சிஎஸ்கேவின் தீரா காதலன்

இந்திய அணியை விட சிஎஸ்கே அணியைப் பெரிதும் நேசிப்பவர் தோனி. ஐபிஎல் வந்துவிட்டால் அவரது ஒவ்வொரு அசைவும் அதைத் தான் வெளிப்படுத்தும். டாடிஸ் ஆர்மி என்று அனைவரும் கலாய்க்க அந்த டீமை கொண்டே கோப்பையை அசால்டாக தட்டிச் சென்றார். ஆனால் பின்னாளில் அதே டாடிஸ் ஆர்மி தான் ஃபேக்பயராகவும் மாறியது. சென்னை ஹோம் ஹிரவுண்டை நம்பி வீரர்களை ஏலத்தில் எடுக்க, கொரோனா காரணமாக துபாயில் ஐபிஎல் நடந்ததால் கோப்பை கனவு தகர்ந்து போனது. அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே ஃபிளேஆப் சுற்றுக்குள் செல்லவில்லை.

ஏலத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகள்

சொல்லப்போனால் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் 2021 ஆகவே இருக்கும். இதைக் கருத்தில் கொண்டும் தான் சென்ற பிறகு சிறந்த கட்டமைப்புடன் அணியை உருவாக்கவும் இந்த வருட ஐபிஎல் ஏலத்தை தோனி பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மினி ஏலம் என்ற குண்டை தூக்கி போட்டது பிசிசிஐ. இதனால் பெரிதாக இளம் வீரர்களை எடுக்க எந்த அணியாலும் இயலாமல் போனது. சிஎஸ்கேவும் அதற்கு விதிவிலக்கல்ல. உடனே துரிதமாக முடிவெடுத்த தோனி, மூத்த வீரர்களான கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், முரளி விஜய், சாவ்லா உள்ளிட்டோரை ஓரங்கட்டினார்.

தோனியின் பிளேயிங் 11-இல் யார் இருப்பார்கள்?… கோப்பையை வெல்ல தோனியின் வியூகம் இது தான்?

ஆர்சிபியிடம் தோற்ற சிஎஸ்கே

இதன்மூலம் அணியின் வைப்பு தொகையும் உயர்ந்தது. இந்தத் தொகையைக் கொண்டு எப்படி அணியின் பலத்தைக் கூட்டுவது, கடந்த சீசனின் எங்கே சறுக்கினோம் என்பதைக் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு ஏலத்தில் அமர்ந்தார்கள். ரெய்னா வந்துவிட்டதால் அணிக்குச் சாதகமாகிவிட்டது. இதனால் கிளியர் கட்டாக ஒரு திட்டம் தீட்டினார்கள். அணிக்குத் தேவை 5ஆம் வரிசையில் தரமான பவர் ஹிட்டர் கம் ஆல்ரவுண்டர் மற்றும் விக்கெட் டேக்கிங் ஆஃப் ஸ்பின்னர். இந்த இரண்டும் தான் சிஎஸ்கேவின் டார்கெட். பவர் ஹிட்டருக்காக மேக்ஸ்வெல்லுக்கு 10 கோடி வரை கொடுக்க சிஎஸ்கே முன்வந்தது இதுதான் காரணம்.

I'm just glad two teams went hard for me': Maxwell explains why the ₹14.25  crore RCB contract didn't surprise him | Hindustan Times

மேக்ஸ்வெல்லுக்கே எல்லா காசையும் கொடுத்துவிட்டால் ஆஃப் ஸ்பின்னரை எடுக்க முடியாதோ என்று எண்ணி ஆர்சிபிக்கு விட்டுக்கொடுத்தது. அதற்குப் பின் தான் அடுத்த ஆப்சனான மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆஃப் ஸ்பின்னருக்காக கிருஷ்ணப்பா கவுதமுக்கு 9.25 கோடி ரூபாய் வரை கொடுக்க துணிந்தது. அவரும் ஆல்ரவுண்டர் என்பது சிஎஸ்கேவுக்கு கூடுதல் பலம். இந்த ஏலத்தில் புஜாரவை எடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றது.

We were looking at him as Ashwin's backup': Former selector explains why Krishnappa  Gowtham is yet to make India debut | Hindustan Times

புஜாராவின் 7 வருட ஏக்கம்; நிறைவேற்றிய தோனி

புஜாரா கடந்த 7 வருடமாக ஏலத்தில் பதிவுசெய்தும் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. பெரிய போட்டி இல்லாமல் புஜாராவை 50 லட்சத்துக்கு சிஎஸ்கே எடுத்து புஜாராவின் ஏக்கத்தை நிறைவேற்றியது. மீதமிருந்து தொகைக்கு கோவை வீரர் ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ஹரிசங்கர் ஆகியோரை தலா 20 லட்சத்துக்கு வாங்கியது. ஏலம் முடிந்துவிட்டது. இப்போது அணியில் இருக்கும் வீரர்களின் விவரம், பிளேயிங் 11இல் யார் யார் இருப்பார்கள் என்று ஒரு பட்டியலைப் பார்க்கலாம்.

தோனியின் பிளேயிங் 11-இல் யார் இருப்பார்கள்?… கோப்பையை வெல்ல தோனியின் வியூகம் இது தான்?

தற்போது இருக்கும் வீரர்கள்

தோனி, ரெய்னா, ராயுடு, டு பிளெஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன், உத்தப்பா, ஜடேஜா, சாம் கரண், பிராவோ, கரண் சர்மா, சாய் கிஷோர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், லுங்கி இங்கிடி, ஆஷீப், மொயின் அலி, சாண்ட்னர், இம்ரான் தாஹிர், ஹாசல்வுட், கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, ஹரிசங்கர், ஹரி நிஷாந்த், பகத் வர்மா

தோனியின் பிளேயிங் 11-இல் யார் இருப்பார்கள்?… கோப்பையை வெல்ல தோனியின் வியூகம் இது தான்?

தோனியின் குட்புக்கில் இருப்பவர்கள்

அணியில் 25 வீரர்கள் இருந்தாலும் அவர்களில் 11 பேர் தான் விளையாட முடியும். தோனியின் பிளேயிங் 11இல் கட்டாயமாக அனுபவ வீரர்கள் இடம்பெறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் ரெய்னா, ராயுடு, டு பிளெஸ்சிஸ், ஜடேஜா, சஹர் என தோனியைச் சேர்த்து ஆறு விக்கெட் காலி. மீதமிருப்பது ஐந்து பேர் தான். அந்த ஐந்து வீரர்களில் யாரை எடுப்பார் யாரை விடுவார் என்பது ஏப்ரல் 10ஆம் தேதி தெரியும். அப்படி அவர் தெரிவுசெய்தால் யாரை தேர்ந்தெடுப்பார் என்பது குறித்து ஒரு யூகத்தைப் பார்க்கலாம்.

அந்த 5 வீரர்கள் யார்?

முதல் வீரர் ருதுராஜ் கெய்க்வாட். கடந்த சீசனில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லையென்று தோனி கூறியிருந்தார். ஃபிளேஆப் வாய்ப்பு பறிபோனதற்குப் பிறகே இளம் வீரர்களைக் களமிறக்கினார். ருதுராஜ் தன்னிடம் ஸ்பார்க் இருப்பதை தோனிக்கு உணர்த்திவிட்டார். விஜய் ஹசாரே டிராபியிலும் கொளுத்தி எடுத்துவிட்டார். ஆகவே ருதுராஜ் தோனி அணியில் இருப்பார். சரி இவர் இல்லையென்றால் வேறு யார் இன்னிங்ஸ் ஓபன் செய்வார்கள்.

தோனியின் பிளேயிங் 11-இல் யார் இருப்பார்கள்?… கோப்பையை வெல்ல தோனியின் வியூகம் இது தான்?

உத்தப்பா இருக்கிறாரே. உத்தப்பா ஓரிரு போட்டிகளில் சரியாக ஆடவிட்டாலும் ஃபார்முக்கு வந்துவிட்டால் கொளுத்திவிடுவார். விஜய் ஹசாரேவில் நல்ல ஃபார்மில் இருந்தார். அதனை தோனி பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆகவே உத்தப்பா, ருதுராஜ் இருவரில் ஒருவர் இன்னிங்ஸ் ஓபன் செய்வார்கள்.

பிராவோவின் இறுதி அத்தியாயமா?

தற்போது பவுலிங் டிபார்ட்மெண்டுக்கு வருவோம். சஹர் தான் பவுலிங் டீம் ஹெட். ஃபாரின் கோட்டாவில் ஹாசல்வுட்டுக்கு கொரோனா என்பதால் லுங்கி இங்கிடிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் டேக்கர் புகழ் ஷர்துல் தாக்கூர் சமீப நாட்களாக பேட்டிங்கிலும் ஜொலிக்கிறார். இந்த சீசனிலிருந்து அவர் தரமான ஆல்ரவுண்டராக வாய்ப்பிருக்கிறது.

தோனியின் பிளேயிங் 11-இல் யார் இருப்பார்கள்?… கோப்பையை வெல்ல தோனியின் வியூகம் இது தான்?

ஆகவே அவர் தோனியின் அணியில் இடம்பிடிப்பார். தோனியின் உளம் கவர் இளம் வீரர் சாம் கரண். யார் இல்லாவிட்டாலும் அவர் அணியில் கண்டிப்பாக இருப்பார். கடைசியாக ஒரு வீரர் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். அது மொயின் அலி அல்லது கிருஷ்ணப்பா கவுதமாக இருக்கலாம். பிரோவா இம்முறை பெஞ்சில் உட்காரவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

தோனியின் பிளேயிங் 11:

1.உத்தப்பா/ருதுராஜ்
2.டு பிளெஸ்சிஸ்
3.ரெய்னா
4.ராயுடு
5.தோனி
6.மொயின் அலி/கவுதம்
7.ஜடேஜா
8.சாம் கரண்
9.ஷர்துல் தாக்கூர்
10.சஹர்
11.இங்கிடி/பிராவோ

தோனியின் பிளேயிங் 11-இல் யார் இருப்பார்கள்?… கோப்பையை வெல்ல தோனியின் வியூகம் இது தான்?

விசில் போடு…!

இது உத்தேசமான அணி தான். போட்டிகள் செல்ல செல்ல வீரர்களின் ஃபார்முக்கு ஏற்றவாறும், மைதானத்தின் தன்மையைப் பொறுத்தும் அணியில் மாற்றமிருக்கலாம். தோனியைப் பொறுத்தவரை அதிரடி மாற்றங்களை எப்போதும் செய்ய மாட்டார். இருந்தாலும் இம்முறை என்ன செய்யப் போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்… தோனி, ரெய்னாவின் ஃபார்மை பொறுத்து கோப்பை கனவும் தோனியின் ஃபேர்வெல் கனவும் தீர்மானிக்கப்படும்… எங்க தல தோனிக்கு.. சிஎஸ்கேவுக்கு விசில் போடு!