’நளினியின் தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்?’ பழ நெடுமாறன் கேள்வி

 

’நளினியின் தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்?’ பழ நெடுமாறன் கேள்வி

1991 ஆம் ஆண்டு மே 21 –ம் நாள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட எழுவர் சிறையில் தண்டனை பெற்றுவருகின்றன. (நளினியின் கணவர் முருகன்)

இவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின், நளினிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. எழுவர் விடுதலை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

’நளினியின் தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்?’ பழ நெடுமாறன் கேள்வி

கணவர் முருகனோடு பேச அனுமதிக்க வில்லை; குடும்பத்தினரைச் சந்திக்க விடுவதில்லை என்று தொடர்ந்து நளினி தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கும் சூழலில் நேற்று (ஜூலை 21) சிறையில் நளினி தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகத் தகவல் வெளியானது. அதற்குக் காரணமாக, சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் எனக் கூறப்பட்டது.

நளினியின் தற்கொலை முயற்சி பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.

’நளினியின் தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்?’ பழ நெடுமாறன் கேள்வி

’29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும், சக சிறைவாசிக்கும் ஏற்பட்டப் பிரச்சனையின் விளைவாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் யார்? என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படவேண்டும் என வற்புறுத்துகிறேன்.

உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நளினியை சந்திக்கவும், ஆறுதல் கூறவும் அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினரை அனுமதிக்குமாறு அரசை வேண்டிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.