“திறந்து விடுங்க அப்புறம் அவஸ்தை படுங்க”-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

 

“திறந்து விடுங்க அப்புறம் அவஸ்தை படுங்க”-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரானா வைரஸை கட்டுப்படுத்தாமல் ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார் .

“திறந்து விடுங்க அப்புறம் அவஸ்தை படுங்க”-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான பேரை பாதித்துள்ள நிலையில் அது மேலும் பரவாமலிருக்க உலக நாடுகள் ஊரடங்கை அமல் படுத்தியது .இதன் காரணமாக மேலும் பரவாமல் அது கட்டுப்படுத்தப்பட்டது .ஆனால் தொடர்ந்து நடந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாலும் ,மக்கள் சொல்லொணா துயரை அனுபவிப்பதாலும் மக்களின் கோரிக்கையினை ஏற்று ,உலக நாடுகள் ஊரடங்கை தளர்த்தியுள்ளது .இந்தியாவிலும் மத்திய அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளது .இதனால் தமிழகத்திலும் ஊரடங்கில் பெரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று பேருந்துகள் ஓட துவங்கியுள்ள நிலையில் ,கோவில்களும் வணிக வளாகங்களும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன .
இந்த ஊரடங்கு தளர்வுகளை கண்டு உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது .அதன்படி இந்த வைரஸ் எளிதாக அடுத்தவரை தொற்றும் தன்மையுடையது என்றும் ,அதை முற்றிலும் ஒழிக்காமல் இப்படி ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழி வகுக்குமென்றும் கூறியுள்ளது .உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் உலக மக்களை இந்த நேரத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் .

“திறந்து விடுங்க அப்புறம் அவஸ்தை படுங்க”-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை