உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் என ஒரே வியாதியில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒரு வியாதிக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து, மற்ற வியாதிக்காரர்கள் எடுத்தால் அது மேலும் சிக்கலை உருவாக்கும் இல்லையா. இஞ்சிக்கு நிறைய மருத்துவக்குணங்கள் இருக்கின்றனதான். மறுக்கவில்லை. உதாரணத்துக்கு ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் இஞ்சிக்கு நல்ல பவர். அதேநேரம், குறைவான ரத்த அழுத்தம் அதாவது லோ பிளட் பிரஷர் வியாதிக்காரர்கள் இஞ்சி டீ அதிகம் குடிப்பதால், அது மேலும் அழுத்தத்தை குறைக்கத்தானேச் செய்யும்? எனவே, யாரெல்லாம் இஞ்சி டீ அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது, என்ன காரணம் என்பதை பார்க்கலாம் வாங்க.
இஞ்சி டீ அதிகம் குடித்தால், அது அமிலத்தன்மையை அதிகரித்து நெஞ்செரிச்சல் ஏற்படுத்தும். கர்ப்பிணிகள் மற்றும் இரத்தப்போக்கு பிரச்னை சம்பந்தவர்கள், இஞ்சி டீ அதிகம் எடுத்துக்கொண்டால், அது மேலும் ரத்தப்போக்கை அதிகரிக்கும், எனவே கவனம். அறுவை சிகிச்சை ஏதேனும் மேற்கொண்டவர்கள் இஞ்சி டீ தவிர்ப்பது நல்லது. வேறு ஏதேனும் நோய்களுக்கு மருந்து சாப்பிடும்போது, இஞ்சி டீயை சேர்ப்பதும் தவறாகும். அல்சர், சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீ பக்கமே வராமல் இருப்பது நல்லது. இஞ்சி டீ அதிகமாகும்போது நாக்கில் அரிப்பு, வாய்ப்புண், மற்றும் வயிற்றெரிச்சல் (இல்லயில்ல, பக்கத்து வீட்டுக்காரன்மேல வர்றது இல்ல, இது வேற) வர வாய்ப்புண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும்போது, இஞ்சியெல்லாம் எம்மாத்திரம்?