“இந்தியாவின் நிலைமை நெஞ்சை உலுக்குகிறது”

 

“இந்தியாவின் நிலைமை நெஞ்சை உலுக்குகிறது”

கொரோனா பாதிப்பால் இந்தியாவின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. நோயாளிகள் எண்ணிக்கையால் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இடமில்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழப்போரை அடக்கம் செய்ய முடியாமல் மயானங்களில் பிணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. டோக்கன் போட்டு சடலங்களை எரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

“இந்தியாவின் நிலைமை நெஞ்சை உலுக்குகிறது”

இரண்டாம் அலை தீவிரமாக இருக்கும் என்று கூறப்பட்டதே தவிர, நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் பாதிக்கும் அளவுக்கு அபாயகரமானதாக இருக்குமென சுகாதாரத்துறை எதிர்பார்க்கவில்லை. ஆக்சிஜன் இல்லாமல் திணறும் நோயாளிகளை காப்பாற்றச் சொல்லி மருத்துவமனையில் வாயில்களில் உறவினர்கள் கதறும் வீடியோக்கள் நெஞ்சை உலுக்குகிறது. அதுமட்டுமில்லாமல், ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான சடலங்கள் எரியூட்டப்படும் புகைப்படங்கள் பதைபதைக்க வைக்கிறது. கொரோனா இரண்டாம் அலையால் திணறிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டுகின்றன.

“இந்தியாவின் நிலைமை நெஞ்சை உலுக்குகிறது”

இந்த நிலையில், இந்தியாவின் நிலை வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியாவின் நிலைமை நெஞ்சை உலுக்குகிறது. எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். 2,600 நிபுணர்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளோம் என்று கூறியுள்ளார்.