கொரோனா வேகம்: இந்தியாவால் உலகத்துக்கே பிரச்னை!- உலக சுகாதார நிலையம் தகவல்

 

கொரோனா வேகம்: இந்தியாவால் உலகத்துக்கே பிரச்னை!- உலக சுகாதார நிலையம் தகவல்

2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவை கடந்த 2020 மார்ச் மாதம் வந்தடைந்தது. அன்றிலிருந்து 5 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர் கட்டுப்பாடுகள் மற்றும் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் பலனாக கொரோனா சற்று கட்டுக்குள் வந்தது. ஆனால் அதுவும் சில காலம்தான். சிலமாதங்கள் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா வேகம்: இந்தியாவால் உலகத்துக்கே பிரச்னை!- உலக சுகாதார நிலையம் தகவல்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், “இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவ பி1617 உருமாறிய வைரஸ் பாதி காரணம். மீதி காரணத்துக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாதது போன்றவை. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள்தொகையில் 70 முதல் 80 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்க பல மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. தற்போதுவரை இந்தியா தனது மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்திற்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது. இந்த சூழலில் வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்தால் அது மிகவும் அபாயகரத்தில் கொண்டு போய் முடியக்கூடும். அதை தடுப்பூசிகளால் கூட தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அது ஒட்டுமொத்த உலகத்திற்கே பிரச்சனையாக மாறக்கூடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.