darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



சென்னையின் கொலம்பஸ் யார் தெரியுமா!?

புனித மேரி சர்ச்
புனித மேரி சர்ச்

சென்னை கோட்டையில் இருக்கும் கொடிமரத்தை நட்டவன் பெயர் எலிஹு யேல்,அவன் மகனுடைய சமாதி இப்போதும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கிறது.அதற்கு காரணம்,இன்றைய உயர்நீதிமன்றம் கட்டப்பட்டுள்ள இடம் 200 வருடம் முன்னால் வெள்ளையர்களின் கல்லறை தோட்டமாக இருந்தது.அந்த கல்லறைகள் இப்போது எங்கே?

ஃபிரஞ்சுக்காரர்கள் சென்னை நகரை கைபற்றிய போரில் அந்த கல்லறை தோட்டம் முற்றிலும் சேதமடைந்து விட்டது.அதனால் உடைந்துபோன அந்த கல்லறை கற்களை எல்லாம் எடுத்து வந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் புனித மேரி தேவாலய வளாகத்துக்குள் பதித்து விட்டார்கள்.அந்த கல்லறைகளுக்கு கீழே உடல்கள் ஏதுமில்லை.

இந்த செயின்ட் மேரி தேவாலையத்தில்தான் ராபர்ட் கிளைவ் திருமணம் நடந்தது.சென்னை,ஸ்டான்லி மருத்துவமனை ஒரு காலத்தில் சிறைச்சாலையாக இருந்தது.அதனால்தான் அந்த வழியாக  மிண்ட்டுக்குப் போகும் சாலையை ஓல்டு ஜெயில் ரோடு என்கிறார்கள்.

மிண்ட் தெரு

மிண்ட் என்றால் நாணைய சாலை.சென்னையில் ஆங்கிலேயர் வெளியிட்ட பகோடா என்கிற நாணையங்கள் வார்க்கப்பட்ட இடம் இதுதான்.இப்படி சென்னை பற்றிய அறிய தகவல்களைத் தேடித் தேடி ஆய்வு செய்து மெட்றாசை சென்னை வாசிகளுக்கு அறிமுகம் செய்தவர் எஸ்.முத்தையா. தனது பிரியமான சென்னையை விட்டு நேற்று பிரிந்து சென்றுவிட்டார்.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் சுப்பைய்யா செட்டியார்,சித்தாள் ஆச்சி தம்பதிகளுக்கு 1930 எப்ரல் 13-ஆம் தேதி பிறந்த முத்தையா,இலங்கையிலும் அமெரிக்காவிலும் படித்தவர்.1968-ல் சென்னை திரும்பி டி.டி.கே மேப்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார். அப்போது வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக,ஒரு சிறு கையேட்டுக்காக சென்னை பற்றிய செய்திகளைத் தேடியதுதான் இவரின் முதல் தொடக்கம்.

முத்தையா

அது மெட்ராஸ் டிஸ்கவர்டு என்ற பெயரில் நூலாக வந்தது.அப்போதே முத்தையா சென்னையின் மேல் காதல் கொண்டு விட்டார்.நூட்களாகவும்,பத்திரிகை பத்திகளாகவும் அவர் எழுதிய வரலாற்று செய்திகளை படித்து வளர்ந்த தலைமுறை இன்று சென்னை தினம் என்று வருடம் தோறும் கொண்டாடுகிறது.

இனி அந்த கொண்டாட்ட தினங்களில் முத்தையா என்கிற ஆளுமையை சென்னை நினைவு கூர்ந்தபடியே இருக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.