பக்கா பிளானால் திமுகவின் ரூட் கிளியர்… அதிமுக கூட்டணிக்குள் நடக்கும் குடுமிபிடி சண்டை!

பக்கா பிளானால் திமுகவின் ரூட் கிளியர்… அதிமுக கூட்டணிக்குள் நடக்கும் குடுமிபிடி சண்டை!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டன. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. ஸ்டாலின் மே 7ஆம் தேதி காலை 9 மணியளவில் பதவியேற்கிறார். தேர்தலில் வெற்றிபெற்ற பின் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாடியே ப்ளுபிரிண்ட் போட்டு திமுக செயல்படுத்தி வருகிறது. இதனால் திமுவின் ரூட் கிளியர் ஆகிவிட்டது.

பக்கா பிளானால் திமுகவின் ரூட் கிளியர்… அதிமுக கூட்டணிக்குள் நடக்கும் குடுமிபிடி சண்டை!

தற்போது எதிர்க்கட்சியான அதிமுக நிலை தான் திண்டாட்டத்தில் இருக்கிறது. 66 இடங்களில் வென்று அதிமுக இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. கூட்டணியிலுள்ள பாஜக நான்கிலும் பாமக ஐந்திலும் வெற்றி கண்டுள்ளன. பாமக இந்தப் போட்டியில் விலகிவிட்டது. பாஜகவுக்கும் அதிமுகவுக்குமே குடுமிபிடி சண்டை நடக்கிறது.

பக்கா பிளானால் திமுகவின் ரூட் கிளியர்… அதிமுக கூட்டணிக்குள் நடக்கும் குடுமிபிடி சண்டை!

சட்டப்பேரவை சம்பிரதாயபடி இரண்டாம் இடம் பிடிக்கும் கட்சியே எதிர்க்கட்சியாகப் பாவிக்கப்படும். அந்தக் கட்சியின் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். அப்படித் தான் 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை விட அதிக தொகுதிகளில் வென்று அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.

பக்கா பிளானால் திமுகவின் ரூட் கிளியர்… அதிமுக கூட்டணிக்குள் நடக்கும் குடுமிபிடி சண்டை!

விஷயம் இப்படியிருக்கையில் கோவை தெற்கில் கடும் போட்டிக்குப் பின் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனோ, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை பாஜக தான் தீர்மானிக்கும் என்று சொன்னார். இது அதிமுக பக்கம் புகைச்சலை ஏற்படுத்தியது. உடனே எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் சேர்ந்து அறிவிப்பு வெளியிட்டனர்.

பக்கா பிளானால் திமுகவின் ரூட் கிளியர்… அதிமுக கூட்டணிக்குள் நடக்கும் குடுமிபிடி சண்டை!

முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் போதே இதே கூத்து தான் அதிமுக கூட்டணியில் அரங்கேறியது. ஏற்கெனவே எடப்பாடியா ஓபிஎஸ்ஸா என உட்கட்சிக்குள் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கையில் குறுக்க இந்த கௌசிக் வந்தா என்ன பண்ணுவீங்க என்கின்ற ரீதியில் பாஜககாரர்கள் குடைச்சலைக் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் அதிமுக தான் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.