3 கொலை… 50 வழக்குகள்… யார் இந்த இளநீர் சங்கர்?- என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட பின்னணி

 

3 கொலை… 50 வழக்குகள்… யார் இந்த இளநீர் சங்கர்?- என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட பின்னணி

3 கொலை மற்றும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் சென்னை ரவுடி இளநீர் சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை அயனாவரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி சங்கர். இவரை பிடித்து விசாரணை செய்ய காவல்துறையினர் இன்று அதிகாலை சென்றுள்ளனர். அப்போது சங்கர் தன் கையில் வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு காவலர் முபாரக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தற்காப்புக்காக அவரை சுட்டதாகவும், அதில் அவர் பலியானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காயமடைந்த காவலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3 கொலை… 50 வழக்குகள்… யார் இந்த இளநீர் சங்கர்?- என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட பின்னணி

இதனிடையே, என்கவுன்ட்டர் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், “ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன, 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ள நிலையில் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவலரை வெட்டிய ரவுடி சங்கரை காவல்துறையினர் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதன்பின்னரே தற்காப்புக்காக காவல்துறையினர் ரவுடி சங்கரை என்கவுன்ட்டர் செய்தனர்.

யார் இந்த இளநீர் சங்கர்

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரடிவு சங்கர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அயனாவரம் கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்ற இளநீர் சங்கர். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2007ம் ஆண்டு அயனாவரத்தை சேர்ந்த ஞானம் மற்றும் நொன்டி கார்த்திக் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கரை கொலை செய்ய முயற்சி செய்தனர். அதில் இருந்து தப்பிய சங்கர், ஞானத்தையும் நொன்டி கார்த்திக்கையும் பழி தீர்க்க காத்திருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு சங்கரின் தம்பியான கதிரவேல் எதிர் கோஷ்டினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், ஞானம் மற்றும் நொன்டி கார்த்திக் ஆகியோருக்கு பக்கபலமாக இருந்த அவரது சித்தப்பா விஜி என்ற கஞ்சா விஜியை 2010ம் ஆண்டு கொலை செய்து பழி தீர்த்தது சங்கர் தரப்பு.

3 கொலை… 50 வழக்குகள்… யார் இந்த இளநீர் சங்கர்?- என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட பின்னணி

சங்கரின் வழக்குகளை கையாண்டு வந்த பாமக வழக்கறிஞரான வன்னி சம்பத் அந்த ஆண்டே கொலை செய்தனர் எதிர்தரப்பினர். இந்த சம்பவத்திற்கு பிறகு அயனாவரத்தில் இருந்து வெளியேறி சங்கர் தலைமறைவாக இருந்தார். தம்பி கதிர்வேல் கொலையில் முக்கிய குற்றவாளியான யமகா பாலாஜியை 2017 ம் திருமுல்லைவாயல் பகுதியில் கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றது சங்கர் தரப்பு. அதே போல மதுரவாயலில் மாமூல் கேட்டு தராததால் பில்டிங் காண்டரக்டர் தம்பியை கொலை செய்தது என மூன்று கொலை வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்து மாமூல் வசூலித்து வந்தனர் சங்கர் தரப்பினர்.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக சூப்பர் மார்கெட் வாசலில் வைத்து சரவணன் என்ற காங்கிரஸ் பிரமுகர் சரவணனை வெட்டிய வழக்கில் சங்கர் தலையீடு இருப்பதாகவும், மாமூல் கேட்டு தராத காரணத்தால் அவரை அச்சுறுத்த அவரது ஆதரவாளர்களை வைத்து வெட்டியுள்ளார். இது தொடர்பாகவும் சங்கரை அயனாவரம் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், நீலாங்கரை பகுதியில் தலைமறைவாக இருந்த சங்கரை பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்ததில் அயனாவரம் நியூ ஆவடி சாலை ஆர்டிஓ அலுவலகம் எதிரில் முட்புதரில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக கூறியுள்ளார். அதனை கைப்பற்ற காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர் முபாரக் மற்றும் இரண்டு காவலர்களோடு அந்த முட்புதர் பகுதிக்கு செல்லும் பொழுது அங்கு மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஆய்வாளரை தாக்க வந்துள்ளார் சங்கர். அப்பொழுது அதனை தடுத்த காவலர் முபாரக் மீது அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் தற்காப்புக்காக சுட்டதில் சங்கர் வயிற்று பகுதி மேல் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலே சங்கர் உயிர் இழந்தார். சம்ப இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.