யார் இந்த ஆனந்த் செல்வகேசரி ?

 

யார் இந்த ஆனந்த் செல்வகேசரி ?

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சிட்டி குழுமத்தின் நுகர்வோர் வங்கி பிரிவு தலைவராக மதுரையை சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரையை பூர்வீகமாக கொண்டவர் தான் இந்த ஆனந்த் செல்வகேசரி. மதுரையில் உள்ள விகாசா பள்ளியில் பள்ளிப்படிப்பை பயின்ற அவர், கோவை தொழில்நுட்ப கல்லூரியில் பட்டப்படிப்பும், பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் சந்தையியல் பிரிவில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். 1991ம் ஆண்டு சிட்டி குழுமத்தில் சென்னையில் பணியில் சேர்ந்த அவர், பின்னர் படிப்படியாக உயர்ந்து, 2011 முதல் 2013ம் ஆண்டு இறுதிவரை சிட்டி வங்கியின் இந்திய நுகர்வோர் வங்கி பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்தார்.

யார் இந்த ஆனந்த் செல்வகேசரி ?

அவரின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் நிர்வாக திறன் காரணமாக, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய அக்குழுமத்தின் தெற்காசிய நுகர்வோர் வங்கி பிரிவின் தலைவராக பதவி உயர்வு பெற்றார். 2015ம் ஆண்டு வரை அப்பதவியை அலங்கரித்த அவர், பின்னர் பதவி உயர்வு பெற்று, சிட்டி குழுமத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் நுகர்வோர் வங்கி பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 2018ம் ஆண்டில் அக்குழுமத்தின் அமெரிக்க நுகர்வோர் வங்கி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட ஆனந்த் செல்வா, தற்போது, சிட்டி குழும வங்கியின் சர்வதேச நுகர்வோர் பிரிவுத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஆனந்த் செல்வகேசரி ?

இந்த பதவியை தற்போது வகித்து வரும் ஜேன் ஃபிரேசர் என்ற பெண்மணி, சிட்டி குழுமத்தின் முதல் பெண் சிஇஒவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனிடையே தமிழர் ஆனந்த் செல்வகேசரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வரும் ஜனவரியில் ஆனந்த் செல்வா சிட்டி குழுமத்தின் சர்வதேச நுகர்வோர் வங்கி பிரிவின் தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்