தயாரிப்பாளர் சங்க தலைவர் யார்? இன்று வெளியாகிறது முடிவு!

 

தயாரிப்பாளர் சங்க தலைவர் யார்?  இன்று வெளியாகிறது முடிவு!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.

தயாரிப்பாளர் சங்க தலைவர் யார்?  இன்று வெளியாகிறது முடிவு!

அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. டி.ராஜேந்தர் – தேனாண்டாள் முரளி தலைமையில் 2 அணிகள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் களத்தில் உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் யார்?  இன்று வெளியாகிறது முடிவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு சுயேட்சையாக பி.எல். தேனப்பன் போட்டியிட்டுள்ளார். தேர்தலில் ஆயிரத்து 303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் ஆயிரத்து 50 பேர் வாக்களித்தனர். தலைவர், பொருளாளர், 2 துணை தலைவர்கள், 2 செயலாளர்கள், 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 112 பேர் போட்டியிட்டுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது. இதில் டிஆர் அணியினர் வாக்குக்கு பணம் மற்றும் தங்க நாணயம் அளிப்பதாக புகார் எழுந்தது. அத்துடன் இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த், தனுஷ், பாரதிராஜா உள்ளிட்டோர் வாக்களிக்கவில்லை.