அடுத்த கொள்கை பரப்புச் செயலாளர் யார்… தி.மு.க-வில் தொடரும் பதவி போட்டி!

 

அடுத்த கொள்கை பரப்புச் செயலாளர் யார்… தி.மு.க-வில் தொடரும் பதவி போட்டி!


இப்போதுதான் தி.மு.க-வில் துணைப் பொதுச் செயலாளர் யார் என்ற பதவி போட்டி முடிந்தது… அதற்குள்ளாக கொள்கை பரப்புச் செயலாளர் யார், பொன்முடி வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்ற பேச்சு கட்சிக்குள் எழுந்துள்ளது.
தி.மு.க பொதுச் செயலாளராக துரை முருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூறியது போல் பொன்முடி துணைப் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார். கட்சி விதிமுறையைத் திருத்தி கூடுதலாக ஆ.ராசாவும் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டுள்ளார்.

அடுத்த கொள்கை பரப்புச் செயலாளர் யார்… தி.மு.க-வில் தொடரும் பதவி போட்டி!


இதனால் தற்போது கட்சிக்குள் இரண்டு பதவியிடங்கள் காளியாகி உள்ளன. ஆ.ராசா வகித்த கொள்கை பரப்பு செயலாளர் பதவியும், பொன்முடி வகித்து வந்த விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பதவியும் காலியாகி உள்ளது. அடுத்து யார் கொள்கை பரப்புச் செயலாளர் ஆவார் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் திருச்சி சிவா அந்த பதவிக்கு பொருத்தமான நபர் என்று பல நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இங்கு பிரச்னை இல்லை, பொன்முடி மாநில அளவிலான பதவிக்கு சென்றதால் மாவட்டத்தில் காலியான அவரது பதவிக்கு பலத்த போட்டி நிலவுகிறது. பொன் முடியின் ஆதரவாளர் புகழேந்தி, முகையூர் சிவா, சமீபத்தில் கட்சியில் இணைந்த

அடுத்த கொள்கை பரப்புச் செயலாளர் யார்… தி.மு.க-வில் தொடரும் பதவி போட்டி!

லட்சுமணன் என பலரும் போட்டிப் போட்டு வருகின்றனர். பொன்முடி கைகாட்டுபவருக்குத்தான் பதவி என்பதால் புகழேந்தி நம்பிக்கையுடன் உள்ளார்.
தி.மு.க-வில் நான்கு துணைப் பொதுச் செயலாளர்கள் மட்டுமே இருக்கலாம் என்ற விதி உள்ளது. அதைத் திருத்தி இன்று ஐந்து பேர் துணைப் பொதுச் செயலாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணைப் பொதுச்

அடுத்த கொள்கை பரப்புச் செயலாளர் யார்… தி.மு.க-வில் தொடரும் பதவி போட்டி!

செயலாளர்களாக உள்ளனர். காலியாக உள்ள ஒரே ஒரு இடத்துக்கு பொன்முடி நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. புதிதாக இணைப் பொதுச் செயலாளர் பதவி இடம் உருவாக்கப்பட்டு அதில், எ.வ.வேலு, பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்டவர்களுக்கு அமர்த்தப்படுவார்கள் என்றே கட்சி வட்டாரங்கள் கூறி வந்தன. திடீர் திருப்பமாக ஆ.ராசா உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளார்.
அதேபோல் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருடைய பதவிக்கு ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை ஆலடி அருணா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும்

அடுத்த கொள்கை பரப்புச் செயலாளர் யார்… தி.மு.க-வில் தொடரும் பதவி போட்டி!

நடக்கவில்லை. கொங்கு மண்டலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதுவும் நடக்காதது கொங்கு மண்டல தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது