அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ல் அறிவிப்பு!

 

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ல் அறிவிப்பு!

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கே.பி.முனுசாமி அறிவித்தார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ல் அறிவிப்பு!

முதல்வர் வேட்பாளர் யார்? என்று அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு தரப்பினரும் மல்லுக்கட்டி வரும் பரபரப்பான சூழலில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, ‘’வரும் அக்டோபர் 7ம் தேதி அன்று அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அறிவிக்கப்படும். அன்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்சும் இணைந்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ல் அறிவிப்பு!

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்று செயற்குழுவில் காரசார விவாதம் நடைபெற்றிருக்கும் நிலையில், இபிஎஸ்க்கு ஆதரவாக நிறைய பேர் குரல் கொடுத்திருக்கும் நிலையில், ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்து, முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிக்க விருக்கிறார்கள் என்கிற தகவல் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.