மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் யார் ?

 

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் யார் ?

தமிழக அரசியல் களத்தில் திமுக- அதிமுக என இரண்டு கட்சிகளையும் தாண்டி, இந்த முறை வேறு சில கட்சிகளும் கவனம் திருப்பி வருகின்றன. கடந்த சில நாட்களாக வேல் யாத்திரை என பாஜக கவனம் திருப்பிய நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், கமல் என கவனம் திருப்பி வருகின்றனர். நேற்று மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து ரஜினிகாந்த் பரபரப்பை கூட்டிய நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், செய்தியாளர்களைத் திரட்டி பரபரப்பை கூட்டினார்.

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் யார் ?

இன்றைய கூட்டத்தில், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த உள்ளதாக பேசிய கமல், தனது கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபுவை அறிவித்தார்.
“தான் செய்த பணிகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர், ஊழலுகுக்கு எதிராக போராடியவர், சமூக அக்கறை கொண்டவர் என என சந்தோஷ் பாபு குறித்து கமல் அறிமுகம் வழங்கினார். அப்படி கமல் பெருமையோடு அறிவித்த சந்தோஷ் பாபு ஐஏஎஸ் யார் என மக்கள் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

யார் இந்த சந்தோஷ் பாபு ?

நேர்மையான அரசு அதிகாரி என பெயர்பெற்ற சந்தோஷ் ஐஏஐ, கடந்த சில மாதங்களுக்கு முன் பதவியில் இருந்து விலகினார். ஒரு தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த அவர், தற்போது கமலின் மக்கள் நீதி மையத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் யார் ?

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் 1995 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆட்சிப் பணிக்கு தேர்வானவர். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக் அண்ட் பொலிடிகல் சயின்ஸ் கல்லூரியில் மேற்படிப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றின் உயர் கல்வி பட்டம் பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களின் கருத்துகளால், உந்தப்பட்டு சமூக அக்கறையோடு செயல்படத் தொடங்கினார். அப்துல்கலாம் அவர்களுடன் பல மேடைகளில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். சிதம்பரம், திருவள்ளூர் மாவட்டங்களில் துணை ஆட்சியர் பொறுப்பு, முதலமைச்சர் தனிப்பிரிவு தனி அதிகாரி, சிவகங்கை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆட்சியர், தொழிலாளர் துறை ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளர் என கடந்த 25 ஆண்டுகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

20க்கும் மேற்பட்ட விருதுகள்

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் யார் ?

குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். இவர் பணியில் இருந்த காலத்தில் ,மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பத்திரிகை, தொழிலாளர்களுக்கு உழைப்போர் உலகம் என பத்திரிகைகளை நடத்தி அவர்களுக்கு வழிகாட்டி வந்துள்ளார். கடைசியாக தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளராகவும், டான்பினெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஒரு டெண்டர் தொடர்பாக முரண்பாடு ஏற்பட்ட நிலையில் பணியில் இருந்து விலக முடிவெடுத்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் விருப்ப ஓய்வு கடித்தம் அளித்தார்.

முன்மாதிரி ஐஏஎஸ் அதிகாரி

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் யார் ?

அதன்பின்னர், தனியார் ஆட்சிபணி பயிற்சி நிறுவனத்தின் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்துள்ளார். தனது பணி காலத்தில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் மகாபலிபுரம் பகுதியில் கிராப்ட் பார்க், எக்கோ பார்க் ஆகியவற்றை செயல்படுத்தி பார்த்தவர். பூம்புகார் விற்பனையகத்துக்கு ஆன்லைன் சந்தை உருவாகியுள்ளார். தான் விரும்பும் அரசியல் மாற்றம் குறித்து தொடர்ச்சியாக தனது இணைய பக்கத்தில் கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவர் . தனது பணி கால நடவடிக்கைகள் அனைத்தையும் https://www.santhoshbabu.org/
என்கிற இணையதளத்தில் பதிவேற்றி முன்மாதிரி ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.