எ.வ.வேலுவை ஐ.டி.யிடம் சிக்க வைத்த திமுக முன்னாள் நிர்வாகி ?!

 

எ.வ.வேலுவை ஐ.டி.யிடம்  சிக்க வைத்த திமுக முன்னாள் நிர்வாகி ?!

திருவண்ணாமலை திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பணம் பட்டுவாடா என வந்த தகவலின் அடிப்படையில் ஐடி ரெய்டு நடந்தது. இருப்பினும் சொல்லும்படியாக எதுவும் சிக்கவில்லை என்று கூறுகிறது திமுக தரப்பு.

எ.வ.வேலுவை ஐ.டி.யிடம்  சிக்க வைத்த திமுக முன்னாள் நிர்வாகி ?!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் விஐபிக்களின் வீடு ,அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது பணம் பட்டுவாடா மற்றும் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கவே சோதனை நடந்து வருகிறது. அதில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவின் கல்லூரி, வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஐடி ரெய்டு கடந்த 2 நாட்களாக நடந்தது. எ.வ.வேலுக்கு ஆதரவாக ஸ்டாலின் திருவண்ணாமலையில் பரப்புரை மேற்கொண்ட நிலையில் ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரி, பிரச்சார வேன் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எ.வ.வேலுவை ஐ.டி.யிடம்  சிக்க வைத்த திமுக முன்னாள் நிர்வாகி ?!

இந்த வருமான வரித்துறை சோதனைக்கு பின்னணியில் திமுகவில் முன்னாள் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த வி.பி துரைசாமிக்கு பங்கு இருப்பதாக தெரிகிறது. அதிமுக முன்னாள் மாநிலங்களவை எம்.பி. ஆக இருந்த வி.பி. துரைசாமி திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்து, பின் அங்கிருந்து தற்போது பாஜகவிற்கு பாஜகவில் தஞ்சம் புகுந்துள்ளார்.இவரே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்புக்கு வேலு குறித்த தகவல் அனுப்பி ஐடி ரெய்டு செய்யக் காரணமாக இருந்தவர் என்று சொல்லப்படுகிறது. திமுகவின் தேர்தல் செலவுக்கான பணம் முழுவதும் வேலு மூலமாக விநியோகம் செய்யப்படுவதாகவும் அதனால் அவரை பிடித்தால் திமுகவிற்கு தேர்தல் நேரத்தில் நெருக்கடி தரலாம் என்று யோசனை கூறியதாகவும் கூறப்படுகிறது.

எ.வ.வேலுவை ஐ.டி.யிடம்  சிக்க வைத்த திமுக முன்னாள் நிர்வாகி ?!

திமுக கடந்த மாநிலங்களவை தேர்தலின்போது தனக்கு வாய்ப்பு அளிக்கும் என்று நம்பியிருந்த வி.பி. துரைசாமி கனவுக்கு முட்டுக்கட்டை போட்டவர் எ.வ.வேலு என்று கூறப்படுகிறது . இதனால் எவ வேலு சிபாரிசில் அந்தியூர் செல்வராஜ் நிறுத்தப்பட்டு எம்.பி .ஆனார். இதனால் தனது வாய்ப்பை பறித்த வேலுவுக்கு அழுத்தம் தர தன்னால் முடிந்ததை துரைசாமி செய்துள்ளதாக கூறப்படுகிறது.