உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

 

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்தது. அதன்பின் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த நீதிபதி போப்டே தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். தற்போது போப்டேவின் பதவிக்காலம் இந்தாண்டு ஏப்ரல் 23ஆம் தேதியோடு முடிவடைகிறது. இன்னும் முழுவதாக ஒரு மாத காலமே இருப்பதால் அடுத்த நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சு நீதிமன்ற வட்டாரங்களிலும் மத்திய அரசு தரப்பிலும் பேசப்படுகின்றன.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

எப்போதுமே ஓய்வுபெறவிருக்கும் தலைமை நீதிபதி தான் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதைப் பரிந்துரை செய்வார். அவர் பரிந்துரைத்தவர் தகுதியானவரா என்பதைக் கண்டுணர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார். இது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு மரபு. குறிப்பாக சீனியாரிட்டியின் படி தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதி பரிந்துரைக்கப்படுவார்.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமை நீதிபதி போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். யாரை அடுத்த தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கலாம் என்ற கேள்வி அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி போப்டேவுக்கு அடுத்து இருப்பவர் நீதிபதி ரமணா.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பிறந்த நீதிபதி ரமணாவின் பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரையில் உள்ளது. இதனால் இவரே அடுத்த தலைமை நீதிபதியாவார் என்று கூறப்படுகிறது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ரமணாவின் தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி போப்டேவுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.