’கபில் 11 அணியில் இவர் நிச்சயம் உண்டு’ கபில்தேவ் சொல்வது யாரை?

 

’கபில் 11 அணியில் இவர் நிச்சயம் உண்டு’ கபில்தேவ் சொல்வது யாரை?

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில்தேவ்க்கு தனித்த இடம் உண்டு. ஆம். ஒருநாள் உலககோப்பை போட்டி தொடங்கி முதல் இரண்டு வருடங்கள் மேற்கிந்திய அணிகளே கோப்பையைத் தட்டிச் சென்றன. அதுவும் ஒருமுறை ஆஸ்திரேலியா மறுமுறை இங்கிலாந்து ஆகிய அணிகளோடு மோதி கோப்பையை வென்றது மேற்கிந்திய அணி. இந்திய அணி தோற்றுதான் வந்தது.

மூன்றாம் உலககோப்பை 1983 ஆம் ஆண்டு நடந்தது. அதில் கலந்துகொள்ள கபில்தேவ் தலைமையிலான அணி சென்றது. அந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் முனைப்போடு மேற்கிந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆனால், இம்முறை அதை எதிர்கொண்டது கபில்தேவ்-ன் இந்திய அணி.

’கபில் 11 அணியில் இவர் நிச்சயம் உண்டு’ கபில்தேவ் சொல்வது யாரை?

முதலில் ஆடிய இந்திய அணி 183 ரன்கள் மட்டும்தான் எடுத்தது. ஆனால், அடுத்து ஆடிய மேற்கிந்திய அணியை 140 ரன்களிலேயே சுருட்டியது இந்திய அணி. இந்தியாவுக்கு முதன்முதலாக உலகக்கோப்பையை வெல்ல வைத்தவர் கபில்தேவ்.

கபில்தேவ் சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசியபோது, “கபில் 11 டீமில் எப்போதும் தோனிக்கான இடம் உண்டு. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

’கபில் 11 அணியில் இவர் நிச்சயம் உண்டு’ கபில்தேவ் சொல்வது யாரை?

உண்மையில் 1983-ல் இந்திய அணி வென்ற உலககோப்பைக்குப் பிறகு இந்திய அணி, மிகச் சிறந்த வீரர்கள் கேப்டனாகச் சென்றும் கோப்பையை வெல்ல முடியவில்லை. 2011 –ம் ஆண்டு மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணியே கோப்பையை வென்று காட்டியது. ஆக, இந்தியாவுக்கு உலககோப்பை கிடைக்க இரு கேப்டன்களே காரணம். ஒன்று கபில்தேவ். மற்றொருவர் தோனி.