காவல்துறை மீதான புகாரை விசாரிப்பது யார்? – நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கமல்ஹாசன் தகவல்

 

காவல்துறை மீதான புகாரை விசாரிப்பது யார்? – நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கமல்ஹாசன் தகவல்

காவல்துறை மீதான புகாரை விசாரிப்பது யார்? – நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கமல்ஹாசன் தகவல்
காவல் துறையினர் மீது மக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்கப்போவது யார் என்று சட்ட ரீதியாக போரை நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தொடங்க உள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மீதான புகாரை விசாரிப்பது யார்? – நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கமல்ஹாசன் தகவல்தமிழகத்தில் காவல் துறையினர் ஒரு சிலர் செய்யும் அத்துமீறல்கள் ஒட்டுமொத்த காவல் துறை மீதும் தவறான தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக, நியாயப்படுத்த முடியாத குற்றச்சாட்டுக்கள் நடந்து வருகின்றன. இவற்றைத் தடுக்க காவலர்களுக்கு மனநல ஆலோசனைகள் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவல்துறை மீதான புகாரை விசாரிப்பது யார்? – நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கமல்ஹாசன் தகவல்இந்த நிலையில் காவலர்கள் மீது மக்கள் கூறும் குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

http://


இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், “சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது?
சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது” என்று கூறியுள்ளார்.