’பீகாருக்கு ஓவைசி… தமிழ்நாட்டுக்கு ரஜினியா?’ பின்புலத்தில் யார்?

 

’பீகாருக்கு ஓவைசி… தமிழ்நாட்டுக்கு ரஜினியா?’ பின்புலத்தில் யார்?

இதோ…. அதோ… என்று கால் நூற்றாண்டாக எதிர்பார்த்துகொண்டிருந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் நடந்தே விட்டது. ரஜினி தனது அதிகாரபூர்வப் பக்கத்தில் ஜனவரியில் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துவிட்டார். கட்சி தொடர்பான அறிவிப்புகள் டிசம்பர் 31-ம் தேதி தெரிவிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் வரும் சட்டமன்ற தேர்தலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. அதற்கான சில வாய்ப்புகளைப் பார்ப்போம்.

’பீகாருக்கு ஓவைசி… தமிழ்நாட்டுக்கு ரஜினியா?’ பின்புலத்தில் யார்?

ரஜினி கட்சி தொடங்கியதும் அவரோடு செல்லக்கூடிய வாய்ப்புள்ள கட்சிகள் எனப் பார்த்தால், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை திமுக கூட்டணியிலிருந்தும், பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை அதிமுக கூட்டணியிலிருந்தும் செல்லக்கூடும்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மண்டல பொறுப்பாளர் குண்டுராவ் நேற்று திமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் சூழலிலும், நாங்கள் போட்டியிடவே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு ஆதரவு தருவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருப்பதாலும் அக்கட்சிகள் செல்ல வாய்ப்பு குறைவே. ஆனால், இதை வைத்து தொகுதிகள் அதிகமாகக் கேட்க வாய்ப்பிருக்கிறது.

’பீகாருக்கு ஓவைசி… தமிழ்நாட்டுக்கு ரஜினியா?’ பின்புலத்தில் யார்?

அதேபோல, அமித்ஷா வந்த கூட்டத்தில் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் பாஜக தரப்பிலும், அன்புமணியை முதல்வர் எனும் அறிவித்த நிலையில் ரஜினி முதல்வர் அல்லது ரஜினி சுட்டிக்காட்டும் இன்னொருவரை முதல்வராக ஏற்றுச் செல்வதில் பாமக தரப்பிலும் தயக்கம் கட்டுவர். ஆனால், இதை வைத்து தொகுதிகள் அதிகமாகக் கேட்க வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக, ரஜினியின் பின்னணியில் பாஜக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பலமாகச் சொல்லபடுவது உண்டு. அதன் அடிப்படையில் பார்க்கையில் பீகாரில் எப்படி ஓவைசி வைத்து , நிதிஷ்குமாரை வெல்ல வைத்தார்களோ… அதுபோல் தமிழ்நாட்டின் ரஜினியை வைத்து எடப்பாடியை வெல்ல வைக்க பாஜக திட்டமிடுகிறதோ என்ற எண்ணமும் பலருக்கு உருவாகியுள்ளது.

’பீகாருக்கு ஓவைசி… தமிழ்நாட்டுக்கு ரஜினியா?’ பின்புலத்தில் யார்?

பீகாரில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். ஓவைசிவியின் இந்திய மஜ்லிஸ் முஸ்லீம் கட்சி அங்குள்ள சில உதிரிகட்சிகளை ஒருங்கிணைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். பாஜக மீது சிறுபான்மையினர் எதிர்ப்பு முத்திரை இருப்பதால், அவர்களின் வாக்குகள் பாஜக கூட்டணிக்குச் செல்லாது. அந்தா வாக்குகளை எதிரணிக்கும் செல்ல விடாமல் தடுக்க, ஒருவரை முன்னிருத்தும் விதமாக பாஜகவின் B டீமாக ஒவைசியை நிறுத்தியதாக குற்றச்சாட்டுகள் வந்தன.

பீகாரில் காங்கிரஸ்- லல்லு பிரசாத் கட்சியே வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனப் பலரும் கணித்த நிலையில், சில தொகுதிகள் முன்னிலைப் பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் வெற்றியைத் தடுத்ததில் ஒவைசியின் பங்கு முக்கியமாக இருந்தது. ஏனெனில், பீகாரில் ஆட்சி அமைக்க, 122 இடங்கள் தேவை. காங்கிரஸ் கூட்டணி வென்றது 110. பாஜக கூட்டணி வென்றது 125. ஓவைசி வென்றது 5 இடங்கள். மேலும் 10 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தோற்க இவர் வாக்குகளைப் பிரித்தது காரணமாக இருந்தது.

’பீகாருக்கு ஓவைசி… தமிழ்நாட்டுக்கு ரஜினியா?’ பின்புலத்தில் யார்?

இதே நிலையை தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது அதிமுக – பாஜக கூட்டணிக்கு சிறுபான்மையினர் வாக்குகள் செல்ல வாய்ப்பு குறைவு. மேலும், பாஜக எதிர்ப்பு வாக்குகளும் அங்கு செல்லாது. சிறுபான்மை மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்குச் சென்றால் எளிதாக வென்றுவிடும். அதைத் தடுத்து, சிறுபான்மை மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பெற ஒருவரை உருவாக்கி விட்டால் என்ன என்ற கேள்விக்குப் பதிலாக வந்தவர்தான் ரஜினிகாந்த்.

’பீகாருக்கு ஓவைசி… தமிழ்நாட்டுக்கு ரஜினியா?’ பின்புலத்தில் யார்?

இப்போது ரஜினிகாந்த் தொடங்கும் புதுகட்சியும், உதிரி கட்சிகளோடு கூட்டணியும் திமுகவின் வாக்குகளைச் சிதைக்கும். திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கும்பட்சத்தில் திமுக குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் எண்ணிக்கையைப் பெற முடியாமல் போகும். இதைத்தான் பாஜக நினைத்து, ரஜினியைக் களமிறக்கியிருப்பதாகவும் இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.