Advertisementரஜினிக்கு பின்னால் இருக்கும் அர்ஜூன மூர்த்தி யார்? இயக்குவது பாஜகவா? திமுகவா?ரஜினிக்கு பின்னால் இருக்கும் அர்ஜூன மூர்த்தி யார்? இயக்குவது பாஜகவா? திமுகவா?
Home அரசியல் ரஜினிக்கு பின்னால் இருக்கும் அர்ஜூன மூர்த்தி யார்? இயக்குவது பாஜகவா? திமுகவா?

ரஜினிக்கு பின்னால் இருக்கும் அர்ஜூன மூர்த்தி யார்? இயக்குவது பாஜகவா? திமுகவா?

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கவுள்ள ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது கட்சியின் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஜினிக்கு பின்னால் இருக்கும் அர்ஜூன மூர்த்தி யார்? இயக்குவது பாஜகவா? திமுகவா?
ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி... யார் இவர்? who is  this arjuna moorthy– News18 Tamil

இந்நிலையில் யார் இந்த அர்ஜூனமூர்த்தி என அரசியல் வட்டாரத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர், கலைஞர் கருணாநிதி காலத்திலேயே திமுக குடும்பத்துடன் நெருக்கமானவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பிஸ்னெஸ் பார்ட்னரகவும் இருந்திருக்கிறார். அதே சமயம் கலைஞரின் மகள் செல்வியின் மருமகனான ஜோதிமணி மற்றும் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் ஆகியோரின் நெருங்கிய உறவினர். இப்படி கலைஞரின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான அர்ஜூனமூர்த்தி திமுகவில் இணையவில்லை. மாறாக பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் ட்விட்டர் பக்கம் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் அர்ஜுனமூர்த்தியின் குழுதான் கவனித்துவருகிறது

பாஜகவில் இருந்துகொண்டு திமுக குடும்பத்தோடு நட்பு பாராட்டியவர், இன்று ரஜினியின் பின்புலத்தில் இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் ரஜினி எடுக்கும் முடிவுகள் மற்றும் ரகசியங்கள் பாஜகவுக்கோ, திமுகவுக்கோ செல்லாது என்பதை உறுதியாக சொல்லமுடியாது.

ரஜினிக்கு பின்னால் இருக்கும் அர்ஜூன மூர்த்தி யார்? இயக்குவது பாஜகவா? திமுகவா?

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

தமிழக ஆளுநராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்துப் பேசினார்.

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...
TopTamilNews