kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பிக் பாஸ் சீசன் 3 வின்னர் யாரு? 2-வது இடத்திற்கு தேர்வான பெண் போட்டியாளர்!  உண்மையைப் போட்டுடைக்கும் பிரபல ஜோதிடர்!

Balaji
Balaji
Loading...

சென்ற உலக கோப்பை தொடரின் போது எந்த அணி கோப்பையை வெல்லும், யார் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்று ஜோதிடம் சொல்லி, ஓவர் நைட்டில் பிரபலமடைந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன், உலக கோப்பை தொடருக்கு பின்னர் கணிசமாக கல்லா கட்டி வருகிறார். 


மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ள பாலாஜி ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘விஹாரி வருட பலன்கள்’ என்ற நிகழ்ச்சியில் வருங்காலத்தை குறித்த நிகழ்வுகளை கணித்து கூறி வருகிறார். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தான் பெரும்பான்மையைப் குவித்து வெற்றி பெறுவார் என்று அவர் கணித்திருந்தது கிட்டத்தட்ட பலித்து இருந்தது. அப்போதெல்லாம் கவனிக்கப்படாத பாலாஜி ஹாசன்,  உலகக் கோப்பைக்கு பிறகு பிஸியாகி, ஆறு மாதங்களுக்கு யாருக்கும் ஜாதகம் பார்க்க மாட்டேன்... நான் அவ்வளவு பிஸியாக இருக்கிறேன்’ என்று பந்தா செய்து வந்தார்.
இந்நிலையில், ஒரு பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பாலாஜி ஹாசனிடம் கேட்கப்பட்டப் போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் தான் வெற்றி பெறுவார் என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார். மேலும், இரண்டாவது இடத்தை ஒரு பெண் தான் பிடிப்பார் என்றும் கணித்துக் கூறியுள்ளார் பாலாஜி. பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆரம்பிக்கப்பட்ட தேதி, நேரம், இடம் ஆகியவற்றை வைத்து இந்த ஜோதிடத்தை தான் கணித்துள்ளதாகவும் கூறியுள்ளார் பாலாஜி. 

balaji


ஜோதிடர் பாலாஜி கூறியதை வைத்துப் பார்க்கும் போது இடத்தை தர்ஸன் அல்லது முகென் பிடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதே போல இரண்டாம் இடத்தை பெண் போட்டியாளர் பிடிப்பார் என்று கூறியுள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் வனிதா, ஷெரின், லாஸ்லியா ஆகிய மூன்று பேர்கள் பெண்கள் தான் இருக்கின்றனர். இதில் வனிதா கண்டிப்பாக இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்பில்லை. எனவே, ஷெரின் அல்லது லாஸ்லியா இருவரில் யாராவது இரண்டாம் இடத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.