ரஜினியின் தயக்கம் யாருக்கு லாபம்… யாருக்கு பாதகம்?

 

ரஜினியின் தயக்கம் யாருக்கு லாபம்… யாருக்கு பாதகம்?

ரஜியின் அரசியல் பிரவேசம் – கால் நூற்றாண்டாக விவாதித்துகொண்டிருந்த ஒரு விஷயம் க்ளைமேக்ஸை நெருங்குகிறது. ஆனால், கட்சி தொடங்குவார் என்ற செய்தி கிடைக்கும் என்று தோன்றவில்லை மாறாக ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்வார் என்றே நடப்புகளை வைத்து உணர முடிகிறது.

1995 ஆம் ஆண்டு தமிழக அரசியல் குறித்த ரஜினி கடும் விமர்சனம் அவரை வலுக்கட்டாயமாக அரசியலுக்குள் இழுத்து வந்தது. 25 வருடங்களாக அவ்வப்போது பேசப்பட்டு வந்த விஷயத்தின் முக்கியத் திருப்பு முனையாக 2017 – ஆம் ஆண்டு டிசம்பரில் தனிக்கட்சி தொடங்குவேன் என்ற ரஜினி அறிவிப்பாக வந்தது. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் கட்சி தொடங்குவார் அதற்கான அறிவிப்பு, பிறந்த நாளான டிசம்பர் 12-அன்று வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா எல்லாவற்றையும் மாற்றி அமைத்தது.

ரஜினியின் தயக்கம் யாருக்கு லாபம்… யாருக்கு பாதகம்?

ரஜினி எழுதிய கடிதம் என ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பரவியது. அக்கடிதத்தின் சாரம், “சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கும் ரஜினியால் கொரோனா தொற்று பரவிகொண்டிருக்கும் இந்தச் சூழலில் கட்சி தொடங்க முடியாது. அதனால் டிசம்பரில் நான் என்னவிதமான முடிவை அறிவித்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள்’ என்பதுதான். அக்கடிதம் உண்மையா… போலியா என்ற விவாதம் கிளம்பியது. இன்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்தக் கடிதம் நான் வெளியிட்டதல்ல.. ஆனால், அதில் குறிப்பிட்டிருக்கும் என் உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மைதான்’ என்று கூறியிருக்கிறார்.

ஆக, ரஜினி நேரடியாகக் கட்சி தொடங்குவதில் தயக்கம் காட்டுகிறார். அநேகமாக அரசியலிலிருந்து விலகிக்கொள்வதற்கே வாய்ப்பு இருக்கிறது. ரஜினியின் இந்தத் தயக்கம் தமிழக அரசியல் களத்தில் யாருக்கு லாபம்… யாருக்கு பாதகம்  என்பதைப் பார்ப்போம்.

ரஜினியின் தயக்கம் யாருக்கு லாபம்… யாருக்கு பாதகம்?
பா.ஜ.க.

முதலில் பாதகம் யாருக்கு என்றே அலசுவோம். முதல் பாதிப்பு பாஜகவுக்கு:

ரஜினியை எப்போதுமே தேசியக் கட்சிகளே அழைத்து வருகின்றன. முன்பு காங்கிரஸ். தற்போது பாஜக. 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியா முழுக்கவும் மோடி அலை வீசியது. ஆனால், தமிழ்நாட்டில் சின்ன அசைவுகூட இல்லை. அதற்கு முன் தேர்தலிலாவது பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் வென்றார். இம்முறை அதுவும் இல்லை. இந்த நிலை என்பது திமுக உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு நிலைகொண்ட கட்சிகள் ஒருங்கிணைத்து நின்றால கிடைத்தது என்பது ஒரு பக்கம். இன்னொன்று இயல்பாகவே பாஜகவின் மதத்தை முன்னிருத்தும் அரசியலுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் ஆதரவு இல்லை என்பதே.

2019 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவோடு இருந்த கட்சிகள் அனைத்தும் தற்போதும் இருக்கின்றன. அதனால், சென்ற முறை ஏற்பட்ட பின்னடைவே இம்முறை சட்டமன்ற தேர்தலிலும் நடக்கலாம் என்பது பாஜகவின் கணிப்பு. அதனால்தான் தலித் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறது. திமுகவிலிருந்து ஆட்களை ஈர்க்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

ரஜினியின் தயக்கம் யாருக்கு லாபம்… யாருக்கு பாதகம்?

பாஜகவிடம் இரண்டு திட்டங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது/ தற்போதைய நிலை அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது. அதில் 50 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக போட்டியிட மேலேயிருந்து அழுத்தம் கொடுப்பது. குறைந்த பட்சம் 20 சட்டமன்ற உறுப்பினர்களாவது இம்முறை இடம்பெற்றுவிட வேண்டும் என்பது  திட்டமாக இருக்கலாம். அப்போதுதான் யார் ஆட்சி அமைத்தாலும் அதை ஸ்திரமற்றதாக வைக்க முடியும் என நினைக்கலாம்.

இரண்டாவது, ரஜினி கட்சி தொடங்கினால், அதிமுகவைக் கைவிட்டு ரஜினியோடு ஜோடி சேர்ந்து அதே 20 சீட்டுகளுக்காகப் போராடுவது என்று எண்ணியிருக்கலாம். ஒருவேளை ரஜினி ஆட்சி அமைக்க முடிந்தால் அது பாஜகவின் ஆட்சிபோலவே இருக்கக்கூடும். ஏனெனில், ரஜினி பல முடிவுகள் பாஜகவுடன் ஒத்துப்போகின்றன. எனவே, ரஜினியின் இந்தத் தயக்கம் முதல் பாதிப்பு பாஜகவுக்குத்தான். இப்போது குறைந்தபட்சம் பாஜகவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைக்கும் முயற்சியாவது நடக்கும். ஆனால், அதிமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சிக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்று சந்தேகமே.

ரஜினியின் தயக்கம் யாருக்கு லாபம்… யாருக்கு பாதகம்?

இரண்டாம் பாதிப்பு: தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோருக்கு. இவர்கள் எப்படியாவது ரஜினி அரசியல் கட்சி தொடங்கி விடுவார் என்று சொல்லி வந்தார்கள். அது நடக்காது என்பது ஒரு பின்னடைவு. கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சிலர் வேறு கட்சியிலிருந்து ரஜினி கட்சிக்கு வர நினைத்திருக்கலாம். அதற்கு வாய்ப்பு மங்குகிறது.

ஆதாயம் யாருக்கு?

ரஜினியின் தயக்கம் யாருக்கு லாபம்… யாருக்கு பாதகம்?

ஒரு விஷயத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு ஆதாயம் கிடைக்கிறது என்றால் அது ரஜினியின் தயக்கம்தான். ஏனெனில், ரஜினியின் வந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து திமுக, அதிகமுக இரு கட்சிகளின் ஓட்டுகளையும் பிரித்திருப்பார். இதில் அதிக இழப்பு அதிமுக வுக்கே. அது இப்போது தடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தால் கூட்டணியில் இருக்கும் கட்சி எனும் அடிப்படையில் அதிமுகவுக்கு ஓட்டு அதிகரிக்கக்கூடும்.

ரஜினியின் தயக்கம் யாருக்கு லாபம்… யாருக்கு பாதகம்?

திமுகவைப் பொறுத்தவரை ரஜினி கட்சி ஆரம்பித்து நின்றிருந்தால் அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் குறிப்பிட்ட சதவிகிதம் அவருக்குக் கிடைத்திக்கக்கூடும். தற்போது அது இல்லையென்றால் பெரும்பகுதி திமுகவுக்கு வரவே வாய்ப்பு அதிகம். மேலும், பாஜக, அதிமுக இரண்டையும் எதிர்க்கும் சூழலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அப்படி அமைந்திருந்தால் ஓட்டுகள் சிதறி திமுக வெல்ல வாய்ப்பு இருந்தாலும், ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு அதிகமுக, ரஜினி கட்சி கூட்டு வைத்து ஆட்சியைப் பிடிக்க முயலலாம் என்பதால் அது திமுகவுக்கு நல்லதல்ல. அதனால், எப்படிப் பார்த்தாலும் ரஜினியின் தயக்கம் திமுகவுக்கு ஆதாயமே.

ரஜினியின் தயக்கம் யாருக்கு லாபம்… யாருக்கு பாதகம்?

இவையெல்லாம் இன்றைய நிலைமைகளிலிருந்து கணிப்பவை மட்டுமே. நாளை ரஜினியின் முடிவு மாறினால் அனைத்தும் மாறக்கூடும். அது ரஜினியின் கையில்தான் இருக்கிறது.