பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் யார்? : பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்!

 

பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் யார்? : பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்!

பிரிட்டனில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த கொரோனா வைரஸ், தற்போது இருக்கும் பாதிப்பை விட அதிகளவு வீரியம் கொண்டதாகவும் பன்மடங்கு பரவும் தன்மை கொண்டதாகவும் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், தற்போது புதிய வகை வைரஸ் பரவி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் யார்? : பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்!

இதன் எதிரொலியாக, பிரிட்டன் விமானங்கள் இன்று முதல் 31ம் தேதி வரை இந்தியா வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை பிரிட்டனில் இருந்து வந்தவர்களையும் பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. முழுமையான பரிசோதனைக்கு பிறகே எந்த வகை கொரோனா என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் யார்? : பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்!

இது குறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கடந்த 1 மாதத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் யார்? என்ற பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்ளுக்கு அறிகுறி இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் விமானத் துறை அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.