’ஆட்டத்தை மாற்றா விட்டால் அணியில் இடம் கிடைக்காது’ முன்னாள் வீரர்கள் எச்சரிப்பது யாரை?

 

’ஆட்டத்தை மாற்றா விட்டால் அணியில் இடம் கிடைக்காது’ முன்னாள் வீரர்கள் எச்சரிப்பது யாரை?

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய வகைகளில் ஆடி வருகிறது. ஒருநாள் போட்டித் தொடரை இழந்தாலும், டி20 போட்டித் தொடரைக் கைப்பற்றியது.

ஹிர்திக் பாண்டியா, நடராஜன், சஹல், ராகுல் ஆகியோரின் ஆட்டத்திறன் இந்த வெற்றிக்கு உதவியது. ஆனால், இந்த சீசனில் அடி வெளுத்துக் கட்டுவார் என்று நினைக்கப்பட்ட ஒரு வீரர் சொதப்பியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவர்தான் சஞ்சு சாம்சன்.

’ஆட்டத்தை மாற்றா விட்டால் அணியில் இடம் கிடைக்காது’ முன்னாள் வீரர்கள் எச்சரிப்பது யாரை?

ஐபிஎல் போட்டியில் அதிரடி ஆட்டத்தை சஞ்சு சாம்சன் வெளிப்படுத்தியதால் இந்திய அணிக்குள் அழைக்கப்பட்டார். அந்த அதிரடியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெளிப்படுத்த தவறிவிட்டார் சஞ்சு சாம்சன்.

நடந்து முடிந்த டி20 மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சனில் ஸ்கோர் முறையே 15,23,10 தான். இவை நிச்சயம் போதாது. சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன், “சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டார். அடுத்து இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அணியில் இடம்பெறுவது சந்தேகமே” என்று கூறியிருக்கிறார். ”சஞ்சு சாம்சனின் ஆட்டம் திருப்தி தருவதாக இல்லை” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகம்மது கைஃப் கூறியிருந்தது இங்கே நினைவு கூர்வது நல்லது.

’ஆட்டத்தை மாற்றா விட்டால் அணியில் இடம் கிடைக்காது’ முன்னாள் வீரர்கள் எச்சரிப்பது யாரை?

முன்னாள் வீரர்கள் சொல்வதில் தவறேதும் இல்லை. வாய்ப்புகள் அதிகம் கொடுக்கக்கூடிய சூழல் இல்லை. அதேபோல, கோலியும் ஒரு வீரர்க்கு அதிகம் கொடுக்கும் கேப்டனும் இல்லை. நடராஜன் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியதைப் போல, சஞ்சு சாம்சன், மயங் அகர்வால், கில் போன்றோர் பயன்படுத்த வில்லை என்பதுதான் உண்மை.