சசிகலாவை வரவேற்கப் போகும் அந்த 50 எம்எல்ஏக்கள், 6 அமைச்சர்கள் யார்? யார்?

 

சசிகலாவை வரவேற்கப் போகும் அந்த 50 எம்எல்ஏக்கள், 6 அமைச்சர்கள் யார்? யார்?

பாகுபலியில் ராஜமாதா என்ட்ரியை விஞ்சும் அளவிற்கு அதிமுகவின் ராஜமாதா சசிகலாவின் என்ட்ரிக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் மவுசு கூடிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவல் தான் ஹாட்&ஹைலைட். பிப்ரவரி 8ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகைதரவிருக்கிறார். அவருக்கு 50 எம்எல்ஏக்களும் ஆறு அமைச்சர்களும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் கடலே தெரியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதப் போவதாக தினகரன் கூறியிருக்கிறார்.

சசிகலாவை வரவேற்கப் போகும் அந்த 50 எம்எல்ஏக்கள், 6 அமைச்சர்கள் யார்? யார்?

அதிமுகவின் அடிப்படை நிர்வாகி ஒருவர் சசிகலா ஆதரவு போஸ்டர் ஒட்டியதற்கு கட்சியை விட்டு தூக்கினார்கள். கர்நாடகா அதிமுக செயலாளர் சசிகலா தங்கியிருக்கும் ரிசார்ட்டுக்கு போனதுக்கே அவரையும் தூக்கினார்கள். இப்போது 50 எம்எல்ஏக்கள் ஆதரவு தரப் போவதாக தகவல் கிளம்பியுள்ளது. அதைவிட ஹைலைட் கொங்கு மண்டல எம்எல்ஏ ஒருவர் 50 லட்சம் ரூபாய் வெள்ளி வாள் பரிசளிக்க தயாராகி விட்டாராம்.

விடுதலையான பின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருந்தாலும் வெளிப்படையான அரசியல் ஸ்டேட்மென்ட்டை சசிகலா அறிவிக்கவில்லை. ஆனால், அவர் வந்த ஜெயலலிதாவின் காரும், அதில் கட்டப்பட்ட அதிமுக கொடியும் அரசியல் பேசிவிட்டன. இவை அவர் அதிமுகவைக் கைப்பற்றுவார் என்பதைக் காட்டுவதாக அவரின் ஆதரவாளர்கள் உறுதிபட கூறுகிறார்கள்.

சசிகலாவை வரவேற்கப் போகும் அந்த 50 எம்எல்ஏக்கள், 6 அமைச்சர்கள் யார்? யார்?

ஓய்வெடுத்துக்கொண்டே எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் தெரிவிக்கிறார்கள். “அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவள் என்னிடமே எடப்பாடி வேலையைக் காட்டுகிறாரா” என்று ஆவேசமாக கூறியிருக்கிறராம். அங்கிருந்து கொண்டே எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறாராம். அந்தப் பேச்சுவார்த்தையின் வெளிப்பாடாகவே எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் என்று தினகரன் கெத்தாக கூறியிருக்கிறாராம்.

சசிகலாவை வரவேற்கப் போகும் அந்த 50 எம்எல்ஏக்கள், 6 அமைச்சர்கள் யார்? யார்?

பெரிய தலைக்கட்டுகளான அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் வெளிப்படையாகவே சசிகலாவுக்கு ஆதரவு நல்கிவருகின்றனர். இதில் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் எந்தப் பக்கம் சாய்வது என்ற யோசனையில் இருக்கிறார்களாம். எடப்பாடியை விட சீனியரான செங்கோட்டையன் அவருக்குக் கீழ் இயங்க சம்பதிப்பாரா என்றால் சந்தேகம் தான். செங்கோட்டையன் தான் முதல்வர் ஆவார் என்று அப்போதே ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும்போது தான் எடப்பாடியை முதல்வராக சசிகலா அறிவித்தார்.

சசிகலாவை வரவேற்கப் போகும் அந்த 50 எம்எல்ஏக்கள், 6 அமைச்சர்கள் யார்? யார்?

செங்கோட்டையனின் நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். மூத்த தலைவர் கே.பி. முனுசாமியும், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் தினகரனை இணைப்போம் என்று கூறுயிருக்கிறார். இது அதிமுக-சசிகலா இணைப்புக்காக விடப்பட்ட சமிக்ஞையாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. எடப்பாடியுடன் நெருக்கத்தில் இருக்கும் முனுசாமியிடமே இந்தக் கருத்து வெளிப்பட்டிருக்கிறது. அதிமுகவின் ஐவர் குழுவில் இவரும் ஒருவர் என்பதால், இது அவரின் தனிப்பட்ட கருத்தா அல்லது குழுவில் இருக்கும் தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோரால் சேர்ந்து எடுக்கப்பட்ட கூட்டுக் கருத்தா என்பது தெரியவில்லை.

சசிகலாவை வரவேற்கப் போகும் அந்த 50 எம்எல்ஏக்கள், 6 அமைச்சர்கள் யார்? யார்?

இவ்வாறு அமைச்சர்களே ஊசலாட்டத்தில் இருக்கும் நிலையில், எம்எல்ஏக்களின் நிலைப்பாடுகள் குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் திமுக பக்கம் தாவிவிட்டனர். வெற்றிவேல் காலமாகிவிட்டார். மற்ற 15 எம்எல்ஏக்கள் தினகரன் பக்கமே இருக்கிறார்கள். குடியாத்தம் எம்எல்ஏவாக இருந்த ஜெயந்தி பத்மநாபன் வரவேற்பதற்காக ஹெலிஹாப்டரில் மலர் தூவ பெர்மிஷன் கேட்டிருப்பதே அதற்கு சாட்சி.

சசிகலாவை வரவேற்கப் போகும் அந்த 50 எம்எல்ஏக்கள், 6 அமைச்சர்கள் யார்? யார்?

இவர்கள் தவிர டெல்டா மாவட்டங்களில் எம்எல்ஏக்களை இழுக்க மன்னார்குடிக்காரரான திவாகரன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். அவர்களில் சிலர் சசிகலாவுக்கு ஆதரவு கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்களாம். எடப்பாடியின் சொந்த மண்டலமான கொங்கு மண்டலத்திலேயே சில எம்எல்ஏக்கள் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கிறார்களாம். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் தேனியைச் சேர்ந்த ஜக்கையனை ஓரங்கட்டும் வேலையில் அதிமுக இரட்டைத் தலைமை இறங்கியிருக்கிறது. அதிருப்தியில் இருக்கும் அவர் தன்னுடைய தார்மீக ஆதரவை சசிகலாவுக்கு தெரிவிக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் 2017ஆம் ஆண்டு தினகரனுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்தது கவனித்தக்கது.

சசிகலாவை வரவேற்கப் போகும் அந்த 50 எம்எல்ஏக்கள், 6 அமைச்சர்கள் யார்? யார்?

மதுரையைப் பொறுத்தவரை 7 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் அமைச்சர்கள். ராஜன் செல்லப்பா, நீதிபதி, பெரியபுள்ளான் ஆகியோருக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சொந்த தொகுதியை விட்டு வேறு தொகுதியில் நிறுத்தப்பட உள்ளதால் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களும் சசிகலா பக்கம் சாயலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சசிகலாவை வரவேற்கப் போகும் அந்த 50 எம்எல்ஏக்கள், 6 அமைச்சர்கள் யார்? யார்?

கூட்டத்தைக் கூட்டி, “சசிகலாவுக்கு ஆதரவாகப் போய் விட வேண்டாம்; அமைதியாக இருங்கள். அவர் குறித்து பேச வேண்டாம். வருமானவரித் துறை ரெய்டு வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன். அதற்கு மேலும் காசு தருகிறேன். பார்த்து செய்யுங்கள்” என்று எடப்பாடி கெஞ்சிக்கொண்டிருக்கிறாராம். இன்னொரு பக்கம் படுபயங்கரமான வரவேற்புக்கு தொண்டர்களின் தியாக தலைவி தயாராகிக் கொண்டிருக்கிறார். தடையை மீறி சமாதியில் சபதம் எடுக்கப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரண என்ட்ரியாக இருந்தால் மதிக்க மாட்டார்கள் என்பதால், மாஸான என்ட்ரி கொடுக்கவே இத்தனை நாடகங்களும் அரங்கேறுவதாகக் கூறப்படுகிறது. டெல்லி மேலிடமும் எடப்பாடியைக் கைகழுவப் போவதாக தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. சசிகலா அதிமுகவைக் கைப்பற்றும் நாள் வெகு விரைவில் என்கிறார்கள். பார்ப்போம்!