டெல்டா கொரோனாவுக்கு எதிராக இவர்களுக்கே அதிக எதிர்ப்பு சக்தி உருவாகும்? – ஐசிஎம்ஆர் ஆய்வில் வெளிவந்த ஸ்வீட் தகவல்!

டெல்டா கொரோனாவுக்கு எதிராக இவர்களுக்கே அதிக எதிர்ப்பு சக்தி உருவாகும்? – ஐசிஎம்ஆர் ஆய்வில் வெளிவந்த ஸ்வீட் தகவல்!

இந்தியாவை உலுக்கிய இரண்டாம் அலைக்குக் காரணம் இந்தியாவிலேயே உருமாறிய டெல்டா கொரோனா தான். இது ஆரம்பத்தில் தோன்றிய கொரோனா வைரஸை காட்டிலும் 50% வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக நுரையீரல் செல்களோடு வலுவான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டை டார்கெட் செய்து ஆட்டிப்படைத்ததும் இதே டெல்டா தான். சமீபத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை நடத்திய ஆய்வில் அதிர வைக்கும் இந்தத் தகவல் வெளியானது.

டெல்டா கொரோனாவுக்கு எதிராக இவர்களுக்கே அதிக எதிர்ப்பு சக்தி உருவாகும்? – ஐசிஎம்ஆர் ஆய்வில் வெளிவந்த ஸ்வீட் தகவல்!
டெல்டா கொரோனாவுக்கு எதிராக இவர்களுக்கே அதிக எதிர்ப்பு சக்தி உருவாகும்? – ஐசிஎம்ஆர் ஆய்வில் வெளிவந்த ஸ்வீட் தகவல்!

உலக சுகாதார அமைப்பு இதனை கவலையளிக்கக் கூடிய வைரஸாக (Variant Of Concern) வகைப்படுத்தியுள்ளது. அதேபோல இது மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கக் கூடியது என்றும் கூறப்பட்டது. மிகவும் குறிப்பாக கொரோனா தடுப்பூசிகள் டெல்டா கொரோனா முன் செயல்திறனை இழக்கலாம் அல்லது பெருமளவு குறையலாம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனிடையே ஒருமுறை கொரோனா வந்துவிட்டால் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதால், அந்நபர்கள் மிக தாமதமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு பரிந்துரைத்தது.

டெல்டா கொரோனாவுக்கு எதிராக இவர்களுக்கே அதிக எதிர்ப்பு சக்தி உருவாகும்? – ஐசிஎம்ஆர் ஆய்வில் வெளிவந்த ஸ்வீட் தகவல்!

இந்த இரு அனுமானங்களுக்கும் விடை தேடும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) ஆய்வு நடத்தியது. மொத்தமாக ஐந்து பிரிவிகளின் கீழ் ஆராய்ச்சி மேற்கொண்டது. அவை பின்வருமாறு:

1.ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்
2.இரு டோஸ் போட்டுக்கொண்டவர்கள்
3.கொரோனாவிலிருந்து குணமாகி ஒரு டோஸ் போட்டுக்கொண்டவர்கள்
4.கொரோனாவிலிருந்து குணமாகி இரு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள்
5.இரு டோஸ் போட்டுக்கொண்ட பின்னும் கொரோனாவால் பாதித்து மீண்டவர்கள் (Breakthrough cases)

டெல்டா கொரோனாவுக்கு எதிராக இவர்களுக்கே அதிக எதிர்ப்பு சக்தி உருவாகும்? – ஐசிஎம்ஆர் ஆய்வில் வெளிவந்த ஸ்வீட் தகவல்!

இவர்களிடம் நடத்திய ஆராய்ச்சில் கொரோனாவிலிருந்து குணமடைந்து ஒன்று அல்லது இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கும் இரு டோஸ் போட்டுக்கொண்டபின் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது மிகவும் அபாயகரமான டெல்டா கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் அவர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்குகின்றன.

இதில் அவர்களின் உடலில் உண்டாகும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியும் சேர்ந்துகொள்வதால் டெல்டா கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயலாற்றுகின்றன என ஆய்வு முடிவு சொல்கிறது. ஆகவே கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஒரு டோஸாவது தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.