Home தமிழகம் சாலையில் வளைவாக வரையப்பட்ட வெள்ளைக் கோடுகள்... சமூக வலைதளங்ளில வைரலான புகைப்படம்!

சாலையில் வளைவாக வரையப்பட்ட வெள்ளைக் கோடுகள்… சமூக வலைதளங்ளில வைரலான புகைப்படம்!

திண்டுக்கல்

சாலையில் வளைவாக வரையப்பட்ட வெள்ளைக் கோடுகள்... சமூக வலைதளங்ளில வைரலான புகைப்படம்!

சாலையில் கிடந்த தென்னை ஓலைகளுக்காக, வெள்ளை நிறக்கோடு வளைவாக வரையப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சி மணியக்காரன்பட்டியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. பின்னர், கடந்த 2 வாரங்களுக்கு முன் சாலையின் இருபுறமும் வெள்ளை நிற கோடுகள் வரையப்பட்டது. அப்போது, சாலையின் ஓரத்திலிருந்து 3 அடி உட்பக்கமாக 2 இடங்களில் வளைவாக வெள்ளை நிற கோடு வரையப்பட்டிருந்தது. அந்த இடங்களில் தென்னை ஓலைகள் இருந்தன.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தென்னை ஓலைகளுக்காக சாலையை உட்புறமாக வெள்ளைக்கோடு வரையப்பட்டதாக கருதி, யாருப்பா அந்த பெயிண்டர்? என அந்த படத்துடன் ஏராளமான மீம்ம்கள் உலாவின. இந்த நிலையில், சாலையில் குறிப்பிட்ட 2 இடங்களில் காவிரி குடிநீர் திட்டத்திற்கான பைப் லைன் இணைப்பு உள்ளதும், அந்த இடங்களில் கான்கிரீட் தொட்டி அமைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

சாலையில் வளைவாக வரையப்பட்ட வெள்ளைக் கோடுகள்... சமூக வலைதளங்ளில வைரலான புகைப்படம்!

பள்ளம் இருப்பதை அறியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்ததாகவும், இதன் காரணமாக பள்ளம் தெரிவதற்காக அந்த இடத்தில் தென்னை ஓலைகளை அங்கு போட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும், இதனை அறியாத சிலர் புகைப்படம் எடுத்து தென்னை ஓலைக்காக சாலையில் கோடு வளைவாக வரையப்பட்டதாக வதந்தி பரப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, சாலையின் ஓரத்தில் காவிரி குடிநீர் இணைப்பு இருப்பது தெரிந்தும், அதிகாரிகள் சாலையை மாற்றி அமைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், விபத்துக்கள் நடக்கும் முன்பாக சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

சாலையில் வளைவாக வரையப்பட்ட வெள்ளைக் கோடுகள்... சமூக வலைதளங்ளில வைரலான புகைப்படம்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும்… தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் நவி மும்பையில் தொழிலாளர் தலைவர் மறைந்த...

ஆப்கானிஸ்தானில் நிறைய முதலீடு செய்துள்ளோம்.. தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும்.. பரூக் அப்துல்லா

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி செய்யும் தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானை தீவிரவாத அமைப்பான தலிபான் கைப்பற்றியுள்ளது. தற்போது...

பஞ்சாப் அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் பதவியை இழக்க நேரிடும்

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் அமைச்சர் பதவியை...

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது… அகிலேஷ் யாதவ்

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். 2021ம் ஆண்டு மக்கள் தொகை...
TopTamilNews