லாக்டவுனால் 10 நாள் வியாபாரம் போச்சு…… வேர்ல்பூல் இந்தியா லாபம் ரூ.92 கோடியாக குறைந்தது….

லாக்டவுனால் 10 நாள் வியாபாரம் போச்சு…… வேர்ல்பூல் இந்தியா லாபம் ரூ.92 கோடியாக குறைந்தது….

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வேர்ல்பூல் இந்தியா நிறுவனம் 2020 மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் வேர்ல்பூல் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.92.34 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 12.19 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் வேர்ல்பூல் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.105.17 கோடி ஈட்டியிருந்தது.

லாக்டவுனால் 10 நாள் வியாபாரம் போச்சு…… வேர்ல்பூல் இந்தியா லாபம் ரூ.92 கோடியாக குறைந்தது….

2020 மார்ச் காலாண்டில் வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.1,353.62 கோடி ஈட்டியுள்ளது. இதே காலாண்டில் அந்நிறுவனத்தின் மொத்த செலவினம் 3.38 சதவீதம் அதிகரித்து ரூ.1,260.34 கோடியாக அதிகரித்துள்ளது. லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் கடைசி 10 நாட்களும் உற்பத்தி அல்லது விற்பனையை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் வருவாய் மற்றும் லாபத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வேர்ல்பூல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாக்டவுனால் 10 நாள் வியாபாரம் போச்சு…… வேர்ல்பூல் இந்தியா லாபம் ரூ.92 கோடியாக குறைந்தது….

கடந்த மார்ச் காலாண்டில் வேர்ல்பூல் இந்தியா நிறுவனம் நிறுவனத்தின் லாபம் சரிவு கண்டுள்ள போதிலும், கடந்த நிதியாண்டில் (2019 ஏப்ரல்-2020 மார்ச்) அந்நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது. அந்த நிதியாண்டில் வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 19.63 சதவீதம் உயர்ந்து ரூ.490.19 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் வருவாய் 11.02 சதவீதம் அதிகரித்து ரூ.5,992.52 கோடியாக உயர்ந்துள்ளது.