darbar
  • January
    17
    Friday

Main Area

Mainபண விஷயத்தில் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

ராசிபலன்
ராசிபலன்

30.08.2019 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம் 
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம்
பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம் 
திருவோணம், அவிட்டம்
பரிகாரம்
வெல்லம்
இன்று  அமாவாசை

mesham

மேஷம்
இன்று உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நம்பிக்கையையும் எண்ணத்தையும் ஊக்குவிப்பார்கள். எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 5

rishabam

ரிஷபம்
உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4

midhunam

மிதுனம்
இன்று உங்கள் ராசிப்படி நிதி நிலைமைகளால் ஆதாயம் கிடையாது. எனவே அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். வாழ்க்கையில் ஏற்படும் இறக்கங்களை எதிர்கொள்ள தைரியத்துடனும் உற்சாகமாகவும் இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2

kadagam

கடகம்
மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  இன்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் மீது ஏதாவது முடிவை நீங்கள் திணிக்க விரும்பினால், உங்கள் நலன் தான் பாதிக்கப்படும். பொறுமையாக நிலைமையைக் கையாள்வது தான் சாதகமான பலன்களைப் பெறுவதற்கான ஒரே வழி. 
அதிர்ஷ்ட எண்: 6

simmam

சிம்மம்
உங்களின் வேகமான செயல்பாட்டால் உத்வேகம் அதிகரிக்கும். வெற்றி பெறுவதற்கு,  காலத்துக்கு ஏற்ப ஐடியாக்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையை இது விசாலமாக்கும். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். 
அதிர்ஷ்ட எண்: 4

kanni

கன்னி
உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள்.  எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். அலுவலக வேலையில் அதிக ஈடுபாடு காட்டுவதால், உங்கள் துணைவருடனான உறவு பாதிக்கப்படலாம். 
அதிர்ஷ்ட எண்: 2

thulam

துலாம்
உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போது தான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். திடீரென கிடைக்கும் பண வரவு செலவுகளை சமாளிக்கும். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும். 
அதிர்ஷ்ட எண்: 5

viruchagam

விருச்சிகம்
உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். குடும்பத்தினருடன் சில சங்கடம் இருக்கும். ஆனால் உங்கள் மன அமைதியை அது கெடுத்துவிட அனுமதித்து விடாதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 7

dhanusu

தனுசு
உடல்நலம் நன்றாக இருக்கும். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும். வரவுக்கு அதிகம் செலவுகள் ஏற்படலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம். இன்று உங்களது  கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்புகள் ஏற்படும். எச்சரிக்கையாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 4

makaram

மகரம்
காதல், நம்பிக்கை, அனுதாபம், பரந்த மனது, விசுவாசம் போன்ற பாசிடிவான உணர்ச்சிகளை உணரும் வகையில் மனதை ஊக்கப்படுத்துங்கள். இந்த உணர்வுகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் எந்த சூழ்நிலையிலும் மனம் தானாகவே செயல்பட ஆரம்பிக்கும். பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 4

kumbam

கும்பம்
வீட்டில் வேலை செய்யும்போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஏதாவது பொருள்களை கவனக் குறைவாக கையாண்டால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். குடும்பத்தினர், குழந்தைகளுடன் செலவிடும் நேரம், உங்கள் சக்தியை புதுப்பிக்க முக்கியமானதாக இருக்கும். அவசரமாக முடிவு எடுப்பது புத்திசாலித்தனமல்ல. உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். 
அதிர்ஷ்ட எண்: 1

meenam

மீனம்
பழைய நண்பரை மீண்டும் காண்பது உங்கள் எண்ணங்களை பிரகாசமாக்கும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். 
அதிர்ஷ்ட எண்: 8

2018 TopTamilNews. All rights reserved.