எந்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது?

 

எந்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது?

இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியும் கொரோனா தடுப்பு மருந்தாக போடப்பட்டுவருகிறது. ஒவ்வொரு தடுப்பூசியையும் இரு டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு பக்க விளைவுகளும், மீண்டும் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களிடையே கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வதில் அச்சம் ஏற்பட்டது. ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை முதல் அலையை விட வீரியமாக இருப்பதால் பலரும் தடுப்பூசியை நாடி வருகின்றனர். அதனால் நாடு முழுவதும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எந்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது?

இந்நிலையில் இரண்டு முறையும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களில் 0.04% பேருக்கும், கோவிஷீல்ட் எடுத்துக் கொண்டவர்களில் 0.03% பேருக்கும் மட்டுமே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது