100% கல்விக் கட்டணம் வசூலித்த பள்ளிகள் எவை?’- விவரங்களை கேட்கும் தனியார் பள்ளி இயக்குனர்!

100% கல்விக் கட்டணம் வசூலித்த பள்ளிகள் எவை?’- விவரங்களை கேட்கும் தனியார் பள்ளி இயக்குனர்!

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்தவையே. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடப்பாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாகவே கற்பிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மூடப்பட்டு இருப்பினும், கல்விக் கட்டணத்தை செலுத்த சொல்லி தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பள்ளிக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

100% கல்விக் கட்டணம் வசூலித்த பள்ளிகள் எவை?’- விவரங்களை கேட்கும் தனியார் பள்ளி இயக்குனர்!

ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, பல தனியார் பள்ளிகள் முதல் தவணையிலேயே முழுக் கட்டணத்தையும் வசூலித்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில், தமிழகம் முழுவதும் மொத்தமாக 85 பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் 9 பள்ளிகள் 100% கல்விக் கட்டணத்தை வசூலித்ததாகவும் தெரிய வந்தது. இந்த நிலையில், முழு கட்டணத்தை வசூலித்த பள்ளிகளின் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.