திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும்?

 

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும்?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடக்க விருக்கிறது. ஆனால், திமுக, அதிமுக இரு கட்சிகளும் தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. எனவே, கூட்டணி கட்சிகளை அரவணைப்பது, தொகுதிகள் ஒதுக்குவது உள்ளிட்ட வேலைகளை தீவிரமாகச் செய்து வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளன. இவை சென்ற பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியில் பங்கு பெற்றவைதான்.

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும்?

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன், ‘ வரும் சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும்’ என்று அறிவித்திருக்கிறார். ஏன் இப்படி அறிவிக்க வேண்டும் எனக் கேட்டால், சென்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி எடுத்த நிலைபாடுதான்.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் மற்றும் விழுப்புரம். இவற்றில் சிதம்பரத்தில் போட்டியிட்ட தொல் திருமாவளவன் மட்டுமே தனிச்சின்னத்தில் போட்டியிட்டார். விழுப்புரத்தில் போட்டியிட்ட விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், திமுகவின் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார். அதேபோல ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர், பெரம்பலூரில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர், நாமக்கலில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஆகியோரும் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார்கள்.

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும்?

எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்ற கேள்வி எழுகிறது.

திமுகவுடன் சேர்த்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, மதிமுக ஆகியவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவே வாய்ப்பு அதிகம். விசிக இப்போது முரண்பட்டாலும் உதய சூரியன் சின்னத்திற்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் சமாதானம் செய்யப்படும் என்றே தோன்றுகிறது.

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும்?

பன்ருட்டி வேல்முருகன் திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அதனால் அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, அவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றே தெரிகிறது. மேலும் ஜெ.குருவின் மகன், மாவீரன் மஞ்சள் படை எனும் பெயரில் ஓர் இயக்கம் நடத்தி வருகிறார். வன்னியர் வாக்குகளைக் கவர அவருக்கு ஒரு தொகுதி அளிக்கப்பட்டு உதய சூரியன் சின்னத்தில் நிற்க வைக்கப்படலாம்.

ஏனெனில் உதயசூரியன் சின்னத்தில் நிற்கையில் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதே உண்மை. மேலும், அவர்கள் நாளை ஆதரவு நிலையிலிருந்து விலகினால், கட்சி தாவல் நடவடிக்கை போல எடுக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.