’ஓப்பனிங் விளையாட இவர்களே பொருத்தம்’ கவாஸ்கர் சொல்லும் ஜோடி எது?

 

’ஓப்பனிங் விளையாட இவர்களே பொருத்தம்’ கவாஸ்கர் சொல்லும் ஜோடி எது?

கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக இந்தியா – ஆஸ்திரேலிய போட்டிகள் அமைந்து வருகின்றன. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை 2:0 எனும் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்த, டி20 போட்டித் தொடரை 2:0 எனும் கணக்கில் இந்திய அணி வென்றது. இதில் தமிழகத்தின் நடராஜன் தனித்து வெளிப்பட்டார்.

தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டை ஆஸ்திரேலியாவும், இரண்டாம் டெஸ்ட்டை இந்தியாவும் வென்றிருக்கிறது.

’ஓப்பனிங் விளையாட இவர்களே பொருத்தம்’ கவாஸ்கர் சொல்லும் ஜோடி எது?

முதல் டெஸ்ட்டில் கோட்டை விட்டாலும், இரண்டாம் டெஸ்ட்டில் இந்தியா வெல்ல முக்கியக் காரணம் கேப்டன் ரஹானே தான்.  கேப்டன் ரஹானே தன் பொறுப்புணர்ந்து சவாலன தம் பணியை எந்தக் குறையும் இல்லாமல் செய்து வருகிறார். குறிப்பாக, சிராஜ் மற்றும் அஸ்வினை சூழலுக்கு ஏற்ப பந்து வீச அழைத்த வியூகத்தைச் சொல்லலாம். 

மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7-ம் தேதி தொடங்க விருக்கிறது. அதில் இதுவரை களம் இறங்காத அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா ஆட விருக்கிறார். அதனால் எந்த ஜோடி ஓப்பனிங் இறங்கும் என்று குழப்பம் நீடிக்கிறது. ஏனெனில், மயங் அகர்வால் – ப்ரித்தீவ் ஷா ஜோடி ஓப்பனிங் ஆடியதில் ப்ரத்திவ் ஷா சொதப்ப அடுத்த போட்டியில் நீக்கப்பட்டார்.

இரண்டாம் டெஸ்ட்டில் மயங் – சுப்னம் கில் ஜோடி ஓப்பனிங் இறங்கியது. ஆனால், இதிலும் மயங் அகர்வால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 17 ரன்கள்தான் அவர் அடித்த அதிகபட்ச ரன்கள். ஒருமுறை டக் அவுட்டானார்.

’ஓப்பனிங் விளையாட இவர்களே பொருத்தம்’ கவாஸ்கர் சொல்லும் ஜோடி எது?

இந்நிலையில் மயங் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருப்பாரா என்பதே ஒரு விவாதமாக போய்க்கொண்டிருக்கிறது. முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் முக்கியமான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

“இந்தியா மோதும் மூன்றாம் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா – மயங் அகர்வால் ஜோடிதான் ஓப்பனிங் இறங்க வேண்டும். சிறப்பாக ஆடி வரும் சுப்னம் கில் நடுவரிசையில் 4 அல்லது 5 வது இடத்தில் இறங்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார். கவாஸ்கரின் கருத்து பலருக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. சுப்னம் கில் நன்கு ஆடிவரும் நிலையில் அவரை ஆர்டர் மாற்றுவது சரிதானா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.