எந்த மாஸ்க் கொரோனாவைத் தடுக்கும்? மாஸ்க் அணிதல் விதிமுறைகள் குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 

எந்த மாஸ்க் கொரோனாவைத் தடுக்கும்? மாஸ்க் அணிதல் விதிமுறைகள் குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க அணியும் மாஸ்க் எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு நாள் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக பதில் அளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எந்த மாஸ்க் கொரோனாவைத் தடுக்கும்? மாஸ்க் அணிதல் விதிமுறைகள் குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுகொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க என்பதைத் தாண்டி, வெளியே பொது இடத்தில் நடமாட வேண்டும் என்றால் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று உள்ளது. நாம் அணியும் மாஸ்க் கொரோனா பாதிப்பில் இருந்து நம்மைக் காக்குமா அல்லது அதுவே வேறு பிரச்னைக்கு வழிவகுத்துவிடுமா என்ற புரிதல் இன்றி, பலரும் பலவித மாஸ்குகளை அணிந்து வருகின்றனர்.

எந்த மாஸ்க் கொரோனாவைத் தடுக்கும்? மாஸ்க் அணிதல் விதிமுறைகள் குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுசாதாரண மாஸ்க், என்95 மாஸ்க், மூலிகை மாஸ்க், பிரிண்ட் மாஸ்க் என்று வித்தியாசமான மாஸ் விற்பனைக்கு வந்துள்ளன. பிளாஸ்டிக் குப்பைகளைத் தவிர்க்க இப்போதுதான் சட்டம் கொண்டு வந்தோம், அதற்குள்ளாக மாஸ்க், குப்பைத் தொட்டிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. கடலில் கொட்டப்படும் குப்பைகளில் மாஸ்க்கும் இருப்பதால் கடல் உயிரினங்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகளும் வெளியாகி உள்ளது.

எந்த மாஸ்க் கொரோனாவைத் தடுக்கும்? மாஸ்க் அணிதல் விதிமுறைகள் குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுஇந்த நிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், ஒரு மாஸ்க்கை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம், அதன் காலாவதி ஆகும் தேதி, தரம், எந்த வகையான மாஸ்க் அணிய வேண்டும் என்று விதிமுறைகளை வகுக்க வேண்டும். எந்த ஒரு தெளிவான விதிமுறைகளும் இல்லை என்றால், யார் வேண்டுமானாலும் மாஸ்க் உற்பத்தி செய்து, அவர்களுக்கு விருப்பப்பட்ட விலையில் விற்பனை செய்வார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். முகக்கவசம் தொடர்பான விதிமுறைகள் உருவாக்கப்படும் வரை முகக் கவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு விசாரணை நடத்தியது. வழக்கை ஏற்ற நீதிபதிகள் இது குறித்து இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.