அடுத்த தலைநகரம் மதுரையா? திருச்சியா? அமைச்சர்களுக்குள் போட்டி ஆரம்பம்!

 

அடுத்த தலைநகரம் மதுரையா? திருச்சியா? அமைச்சர்களுக்குள் போட்டி ஆரம்பம்!

தமிழ் வளர்ச்சிக்காக மதுரை 2ஆவது தலைநகராக்க வேண்டும் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருப்பதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் செல்லூர் ராஜுவும் ஆதரவு அளித்திருந்தார். இது குறித்து சமீபத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “அரசியலுக்கும் கலையுலகிற்கும் தலைநகராக திகழ்வதாலும் தொழில்கள் நிறைய வேண்டும் என்பதாலும் மதுரையை அடுத்த தலைநகராக அறிவிக்க வேண்டும் என்றும் திருச்சியை தலைநகராக்க எம்ஜிஆர் விரும்பினார். ஆனால் எதிர்கட்சிகளால் அது நடக்கவில்லை” என்றும் தெரிவித்திருந்தார்.

அடுத்த தலைநகரம் மதுரையா? திருச்சியா? அமைச்சர்களுக்குள் போட்டி ஆரம்பம்!

இதனைத் தொடர்ந்து இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், மதுரையை 2ஆவது தலைநகராக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு எடுக்க வருவதாக கூறினார். இந்த நிலையில், திருச்சியை தான் 2ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் மன்றாடி திருச்சியை 2ஆவது தலைநகராக்க முயற்சி எடுப்போம் என்றும் கூறியுள்ளார். இதனால், சென்னைக்கு அடுத்த தலைநகரம் மதுரையா? திருச்சியா? என அமைச்சர்களுக்குள்ளேயே போட்டி ஆரம்பமாகியுள்ளது.