கமலஹாசன் கூட்டணியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி?

 

கமலஹாசன் கூட்டணியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி?

திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்தபடியான பெரிய கட்சி காங்கிரஸ் கட்சிதான். அக்கட்சிக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்று பேசப்படுகிறது. திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி கட்சியின் பல மட்டங்களில் உள்ளவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை கொடுக்க கூடாது என்று பேசிவருகிறார்கள்.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பட்சம் 20 தொகுதிகளில் தான் திமுக தரப்பில் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் முதன்மையான கோஷ்டிகள் என்று பார்த்தாலே ஐந்து கோஷ்டிகளைச் சொல்லிவிடலாம். ஒரு கோஷ்டிக்கு ஐந்து தொகுதிகள் என்று வைத்தால் கூட குறைந்தபட்சம் 30 லிருந்து 35 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு அவசியம்.

கமலஹாசன் கூட்டணியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி?

இந்நிலையில் 20 தொகுதிகள் மட்டுமே திமுக தரப்பில் கொடுக்கப்பட்டால் நிர்வாகிகளைத் திருப்திப் படுத்த முடியாது என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி சில மாதங்களுக்கு முன்பு கமலஹாசனை திமுக கூட்டணிக்கு அழைத்திருந்தார். ஆனால் கமலஹாசனின் கணக்கோ வேறு விதமாக இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸைப் பிரித்து புதிய கூட்டணி அமைக்க கமலஹாசன் முயற்சி செய்கிறார்.

கமலஹாசனை எப்போதும் பாரதிய ஜனதா கட்சியின் B டீம் என்று சொல்லி வருகிறார்கள். அந்தப் பேச்சை மாற்ற இந்தக் கூட்டணி அமைத்தல் உதவும் என நினைக்கிறார். அதற்கு ஏற்றார்போல் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் பேச்சுக்களும் இருக்கின்றன. திமுக ஆதரவால் பாராளுமன்ற உறுப்பினரான கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்து கமல ஹாசன் குறித்து பேசிக் கொண்டே இருக்கிறார். நேற்றும் காங்கிரசுடன் கமலஹாசன் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கமலஹாசன் கூட்டணியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி?

காங்கிரஸ் கட்சி கமலஹாசனின் மக்கள் நீதி மைய கூட்டணியை நோக்கி செல்கிறது இதுபோன்ற பேச்சுகள் என்பதையே யூகிக்க வைக்கிறது. திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சியை அவர்கள் வெளியேற்ற விரும்பவில்லை என்றே தெரிகிறது. ஆனால் தொகுதிகள் 20லிருந்து 25 க்கும் மேல் நிச்சயம் கொடுக்கக் கூடாது என்கின்ற முடிவில் இருப்பது போலவும் பேச்சு அடிபடுகிறது. காங்கிரஸ் கட்சி அதில் அதிருப்தி ஆனால் கமல்ஹாசனை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.

ஒருவேளை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி கமலஹாசன் கமலஹாசன் கூட்டணியில் சேர்ந்தால் என்னவாகும்? நிச்சயம் திமுகவுக்கு ஒரு பின்னடைவுதான். காரணம் தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சிறிதளவு செல்வாக்கு இருக்கிறது. தென் மாவட்டங்களில் அழகிரி குட்டையை குழப்பி வருவதால் காங்கிரஸ் கட்சியின் உதவி திமுகவுக்கு பெரிதும் தேவைப்படும். காங்கிரஸ் கட்சி பிரிந்து சென்றால் அந்த இடங்களில் திமுக வெல்வதற்கான வாய்ப்புகள் குறையும் என்பதே பலரின் கணிப்பு.

கமலஹாசன் கூட்டணியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி?

கார்த்திக் சிதம்பரம் உட்பட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கமலஹாசன் குறித்து பேசுவது திமுக கூட்டணியில் தொகுதிகளை அதிகரிப்பதற்காக என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் இது இன்னும் பெரிதாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.