• March
    28
    Saturday

Main Area

Main



எங்க அப்பா போல இருக்கிறான்ல! மகன் படத்தை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் வனிதா

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

நடிகர் விஜய் உடன் நாயகியாக நடித்தவர் வனிதா. பிரபல நடிகர்கள் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகள். ராஜ்கிரண் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்த வனிதா, ஒரு சில படங்களுக்குப் பிறகு காணாமல் போனார். ஆனால், குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி டி.வி, பத்திரிகைகளில் வனிதாவின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருந்தது.

vanitha

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு பல பேரின் வயிற்றெரிச்சலை சம்பாதித்தார். இதன் பிறகு மீண்டும் வனிதா பற்றி இணையதளங்கள், பத்திரிகைகளில் செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. 

ட்விட்டரில் அவர் தன்னுடைய மகன் படத்தை வெளியிட்டுள்ளார். அதில், "என் தளபதி, சூப்பர் ஸ்டார், தல, உலகநாயகன் என் வாழ்வில் எல்லாமேயான என் விஜய் ஶ்ரீஹரி... அவன் என்னுடைய அப்பாபோலவே இல்லை?" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

2018 TopTamilNews. All rights reserved.