இயேசுதாஸ் எங்கே? மவுனம் ஏன்?

 

இயேசுதாஸ் எங்கே? மவுனம் ஏன்?

எண்பதுகளின் இசைவானத்தில் இயேசுதாஸ் – எஸ்.பி.பி.தான் சூரியன் சந்திரன். விஜய்யும் அஜீத்தும் இணைந்து நடித்தால் இன்றைக்கு எத்தனை வரவேற்பு இருக்குமோ அந்த அளவிற்கு அன்றைக்கு இயேசுதாசும் எஸ்.பி.பியும் இணைந்து பாடிய ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள..’பாடலுக்கு இருந்தது. இன்றைக்கும் மேடைகளில் அந்த பாடலை வேறு பாடகர்கள் பாடினாலே அத்தனை வரவேற்பு.

’தளபதி’ சினிமாவில் பாடியபோது எத்தனை எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருந்ததோ, அதுபோலவே, பின்னாளில் லக்‌ஷ்மண் ஸ்ருதி இசைவிழாவில் ஒருமுறை இயேசுதாசும் – எஸ்.பி.பியும் அந்த பாடலை மேடையில் இணைந்து பாடுகிறார்கள் என்றபோதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு, வரவேற்பு.

இயேசுதாஸ் எங்கே? மவுனம் ஏன்?

அதன்பிறகு இளையராஜா இசைநிகழ்ச்சி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் அவ்விருவரும் அப்பாடலை பாடியபோதும் அதே ஆர்ப்பாட்டம்தான். இயேசுதாஸ் மீதான மரியாதையினால் தனது இசையில் அவரை, ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ன்னு பாடவும் வச்சார் எஸ்.பி.பி.

கர்நாடக இசையில் கொடிகட்டியவர் இயேசுதாஸ். ஆனால், ’’நான் முறையாக சங்கீதம் கற்றுவந்தவன் அல்ல. மேடைகளில் பாடிக்கொண்டிருந்தபடியே சினிமாவுக்கு வந்துவிட்டேன்’’ என்று சொல்லிவந்தவர் எஸ்.பி.பி. இந்த விவகாரத்தை ஒருமுறை மேடையில் பேசியபோது கொண்டுவந்தார் இயேசுதாஸ். ’’கர்நாடக இசை தனக்கு தெரியாது என்று சொல்லிவருகிறார் எஸ்.பி.பி., ஆனால் சங்கீத ஜாதிமுல்லை உள்ளிட்ட அவர் பாடல்களை கேட்டால், இவருக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?’’ என்றூ கேட்பார் இயேசுதாஸ்.

இயேசுதாஸ் எங்கே? மவுனம் ஏன்?

இசையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து உலகம் முழுவதும் இசைநிகழ்ச்சிகள் நடத்திய எஸ்.பி.பி., ‘’இயேசுதாஸ் அண்ணாதான் என் குரு. அவருக்கு பாத பூஜை செய்வது எனது காணிக்கை’’என்று சொல்லிவிட்டு, அவரது பாதங்களை கழுவி, பாதபூஜை செய்து ஆசி பெற்றார்.

கடந்த 50 நாட்களுக்கு மேலாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் எஸ்.,பி.பிக்கு இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்ட பலரும் ஆறுதல் சொல்லி வந்தநிலையில், இயேசுதாசிடம் இருந்து ஒரு ஆறுதலும் வரவில்லையே என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

இயேசுதாஸ் எங்கே? மவுனம் ஏன்?

இந்நிலையில், எஸ்.பி.பி. மறைந்து, குடியரசுத்தலைவர், பாரத பிரதமர் வரைக்கும் இரங்கல் தெரிவித்தும், இயேசுதாஸ் ஏன் இன்னமும் இரங்கல் தெரிவிக்கவில்லை. ஏன் மவுனமாக இருக்கிறார்? என்றே கேள்வி எழுப்புகிறார்கள் இருவரின் இசை ரசிகர்களும்.

  • கதிரவன்