பதவியேற்புக்கு பின் எங்கு செல்கிறார் ஸ்டாலின்?

 

பதவியேற்புக்கு பின் எங்கு செல்கிறார் ஸ்டாலின்?

சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று காலை 9 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். அவருடன் அமைச்சர்கள் 33 பேரும் பதவி பிரமாணம் செய்து கொள்கின்றனர். கொரோனா காரணமாக சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது. முதல்வர் மற்றும் 33 அமைச்சர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதனால் திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

பதவியேற்புக்கு பின் எங்கு செல்கிறார் ஸ்டாலின்?

முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்ய இருக்கிறார். மறைந்த திமுக நிர்வாகி சிட்டி பாபுவின் இல்லத்திற்கு சென்று அவரின் உருவ படத்திற்கும் மரியாதை செய்ய உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா மற்றும் தலைமைச்செயலக நிகழ்வுகள் திட்டமிடல்

*ஆளுநர் மாளிகை

*அண்ணா, கருணாநிதி நினைவிடம்

*பெரியார் திடல்

*மறைந்த பேராசிரியர் அன்பழகன் இல்லம்

*கோபாலபுரம்

*கனிமொழி சி.ஐ.டி வீடு

*தலைமைச்செயலகம்

*தலைமைச்செயலகம் – மாலை 4 மணிக்கு

*அமைச்சரவைக் கூட்டம்

*மாவட்ட ஆட்சியர்களுடன்  ஆலோசனை