தி.மு.க எம்.எல்.ஏ துப்பாக்கியால் சுட்ட போது எங்கே சென்றீர்கள்? – நெட்டிசன்களை கேட்கும் பா.ஜ.க

 

தி.மு.க எம்.எல்.ஏ துப்பாக்கியால் சுட்ட போது எங்கே சென்றீர்கள்? – நெட்டிசன்களை கேட்கும் பா.ஜ.க

பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோத் செல்வம் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. வட இந்தியாவைப் போல வன்முறைக் கலாச்சாரத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கிச்சூடு நடத்திய போது பொங்காதது ஏன் என்று பா.ஜ.க தரப்பில் பதில் கேள்வி எழுப்பப்படுகிறது.

தி.மு.க எம்.எல்.ஏ துப்பாக்கியால் சுட்ட போது எங்கே சென்றீர்கள்? – நெட்டிசன்களை கேட்கும் பா.ஜ.க


தமிழக பா.ஜ.க இளைஞரணித் தலைவராக இருப்பவர் வினோத் செல்வம். கையில் துப்பாக்கியுடன் பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகள் சூழ அவர் நிற்க்கும் புகைப்படம் ஒன்று ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. அவர் மாஸ்க் போட்டுள்ளதால் தற்போது எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. ஆனால், எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. தமிழக பா.ஜ.க-வில் அதிக அளவில் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் சேர்க்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த புகைப்படம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து சமூக ஊடகங்களில், “ரவுடிகள், தீவிரவாதிகளின் கூடாரமான தமிழக பா.ஜ.க துப்பாக்கியை தூக்க ஆரம்பித்துள்ளது. பொது வெளியில் ஆயுதங்களை ஏந்துவது குறித்து சென்னை பெருநகர போலீசின் கருத்து என்ன?” என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மற்றொருவர், “ஒரு பக்கம் ரவுடிகளையும் குற்றவாளிகளையும் சேர்த்துக்கொள்கிறார்கள். அடுத்து வடநாட்டு துப்பாக்கிக் கலாச்சாரத்தையும் கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டை இன்னொரு பீகாரா மாற்றாமல் விடமாட்டார்கள் போல பா.ஜ.க-வினர். ஆரம்பத்திலேயே விரட்டியடிக்கப்பட வேண்டிய கலாச்சாரம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க எம்.எல்.ஏ துப்பாக்கியால் சுட்ட போது எங்கே சென்றீர்கள்? – நெட்டிசன்களை கேட்கும் பா.ஜ.க


இது குறித்து தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, “லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கும் துப்பாக்கியைக் காட்டுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன் பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்டபோது, அவருடைய வீட்டில் இருந்து துப்பாக்கிகள், போலி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது எல்லாம் கொந்தளிக்காதவர்கள் இப்போது கொந்தளிப்பது வியப்பாக உள்ளது” என்றார்.