ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன?

 

ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன?

கும்பகோணத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன். இந்த சகோதரர்கள் இருவரும் ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன?

இந்த பண மோசடி வழக்கில் 7 பேரை காவல்துறை கைது செய்திருக்கின்றனர். இதில் அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.

இந்த ஜாமீன் மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, விரைவில் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட இருக்கிறது இந்த வழக்கு என்று தெரிவிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன?

இதையடுத்து, நிதி நிறுவனம் நடத்திய இவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன? இவர்களுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன என்கிற முழுவிவரங்கள் என்ன? இதுவரைக்கும் எத்தனை சொத்துக்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன? இவர்களுக்கு குவைத் மற்றும் மலேசியாவில் நிறுவனங்கள் இருக்கிறதா? அங்கு நிறுவனங்கள் இருந்தால் அதன் முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு விசாரணையை வரும்16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.