நீட் கொலை வாளை எப்போது கீழே போடுவீர்கள்! – நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி கேள்வி

நீட் கொலை வாளை எப்போது கீழே போடுவீர்கள்! – நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி கேள்வி

மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் என்ற கொலை வாளை எப்போது கீழே போடுவீர்கள் என்று நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசியது வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீட் தேர்வைக் கைவிட வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் பேசுகையில், “அனிதா முதல் எனது தொகுதியைச் சேர்ந்த ஜோதிஶ்ரீ துர்கா

நீட் கொலை வாளை எப்போது கீழே போடுவீர்கள்! – நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி கேள்வி

வரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்தின் தீரா துயரத்திலிருந்து கேட்கிறோம், நீட் தேர்வை எப்போது கைவிடுவீர்கள். நீட் திரிசூலத்தின் மூன்று முணைகள், ஒரு மாநில அரசின் கல்வி முறையையும், மாநில அரசின் உரிமையையும் குத்திக் கிழிக்கிறது. மறுமுனை டீச்சிங் என்பதைக் கொன்று கோச்சிங் என்பதைக் கொண்டாடுகிறது. மூன்றாவது முனை குழந்தைகளின் உளவியலைச் சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது.

நீட் கொலை வாளை எப்போது கீழே போடுவீர்கள்! – நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி கேள்வி

இன்னும் எத்தனை கொலைகளுக்குப் பிறகு இந்த கொலை வாளினை கீழே போடுவீர்கள் என்று நாங்கள் கேட்கிறோம். தமிழக சட்டப் பேரவை, மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட மசோதாவை ஏகமானதாக நிறைவேற்றி அனுப்பியது. குடியரசுத் தலைவர் அதனைத் திருப்பி அனுப்பினார். அரசியலமைப்புச் சட்டம் 201ன் படி திருப்பி அனுப்புவதற்கான காரணத்தைக் கூற வேண்டும். இன்றைக்கு வரை கூறவில்லை. ஆனால் இதைப் பற்றி

நீட் கொலை வாளை எப்போது கீழே போடுவீர்கள்! – நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி கேள்வி

நீதித்துறை ஆளுமைகள் வாய் திறப்பது இல்லை. திரைக் கலைஞர் சூரியா சொன்னால் உடனே எதிர்வினை புரிகிறார்கள். நீதியும் தேர்வும் மனுநீதியின் சாரமாகவோ, சாயலாகவோ அமைந்துவிடக் கூடாது. எனவே, நீட் தேர்வைக் கைவிடுங்கள்” என்றார்.
சு.வெங்கடேசனின் இந்த பேச்சை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.