பொருளாதார தோல்விகளை பிரதமர் எப்போது ஒப்புக்கொள்வார்? – ப.சிதம்பரம் கேள்வி

பொருளாதார தோல்விகளை பிரதமர் எப்போது ஒப்புக்கொள்வார்? – ப.சிதம்பரம் கேள்வி

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதை பிரதமர் மோடி எப்போது ஒப்புக்கொள்வார் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார தோல்விகளை பிரதமர் எப்போது ஒப்புக்கொள்வார்? – ப.சிதம்பரம் கேள்வி
ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “பல லட்சக் கணக்கானோர் கடந்த 12 மாதங்களில் வேலையிழந்துள்ளனர். இதற்கு இரண்டு மிக முக்கிய தொழில்துறைகளில் ஏற்பட்ட சரிவுதான் காரணம். ஒன்று தொலைத் தொடர்பு, மற்றொன்று விமான போக்குவரத்துத் துறை. இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக வேலை பெற்றவர்கள் பாதிக்கப்பட்டள்ளனர்.

பொருளாதார தோல்விகளை பிரதமர் எப்போது ஒப்புக்கொள்வார்? – ப.சிதம்பரம் கேள்வி
நம்முடைய மிக முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களுள் ஒன்று மிகப்பெரிய சரிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளதா? தன்னை காப்பாற்றிக்கொள்ள போராடும் அந்த தொலைத் தொடர்பு துறையை காப்பாற்ற அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா?

http://

நாட்டின் பொருளாதார பிரச்னை மேலும் மேலும் கீழ்நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறது, இதை எப்போது பா.ஜ.க அரசு ஒப்புக்கொள்ளப் போகிறது? பிரதமர் மோடி எப்போது தன்னுடைய தோல்வி மற்றும் தன்னுடைய பொருளாதார மேலாளர்களின் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.