Home இந்தியா கடைகோடி இந்தியனுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும்?

கடைகோடி இந்தியனுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும்?

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறிவதில் உலகம் முழுவதும் முன்னணி மருந்து நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் பாரத் பயோடெக், சீரம், ஜைடஸ் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி எந்த அளவில் உள்ளது என்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று கண்டறிந்து ஊக்கப்படுத்தி உள்ளார்.

கொரோனோ தொற்றுக்கான முதல் அலை தொடங்கிய பொழுதே, தடுப்பூசி உடனடியாக கண்டறியப்படும் என்றும், அந்த மருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மக்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். அப்படி செய்வதன் மூலம் மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா புதிய சாதனையை படைக்கும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புக்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பலக்கட்ட ஆய்வக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆய்வக பரிசோதனைகள் எவ்வளவு நாட்கள் செல்லும் என்பது தெரியாமலேயே, தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்துவோம் என அறிவித்தது சர்ச்சையானது. அதன்பின்னர் அந்த அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

ICMR

இப்படியான சர்ச்சைகளுடன் மருந்து தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அந்த முயற்சியில் தற்போது கிட்டத்தட்ட 95% வெற்றியை ஆய்வகங்கள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் மருத்துவ மையம், அமெரிக்காவின் பைஸர், ரஷ்யாவின் ஸ்புட்னிக் உள்ளிட்ட நிறுவனங்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து இந்த மருந்துகள் வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனுமதியை அந்தந்த நாடுகள் அளிக்க உள்ளன.

தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், முதற்கட்டமாக தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என முன்கள பணியாளர்களுக்கு ஒவ்வொரு கட்டமாக முன்னுரிமை அடிப்பட்டையில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சிறப்பானது என்றாலும், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் மருந்து செலுத்துவதற்கான கால அவகாசம் எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது குறித்து எந்த தெளிவான விளக்கம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

மருந்து விலை எவ்வளவு ? அதை வாங்குவதற்கான சக்திகொண்ட மக்கள் யார் ? மருத்துவ வினியோக கட்டமைப்பு ? தேவையான இடத்திற்கு மருந்துகளை அனுப்புவது எப்படி ? என்கிற முன்திட்டமிடல்கள் இதுவரை அரசு மேற்கொள்ளவில்லை என்கின்றனர் சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள். இதற்கு மிகப்பெரிய மருத்துவ நெட்வொர்க் அவசியமாக உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை அரசு என்ன செய்து உள்ளது என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது. ஆக்ஸ்போர்ட் மருத்துவ மையத்தின் உற்பத்தித்திறன் 10 கோடி டோஸ் என்றால், இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் உற்பத்தி திறன் 10 லட்சம் டோஸ் என்கிற அளவிலேயே உள்ளது. இப்படியாக நாம் மிகக் குறைந்த உற்பத்தித் திறன் கொண்டுள்ள நிலையில், உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்யப்போகிறோம் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

வெளிநாட்டு மருந்துகளை இறக்குமதி செய்வோம் என்றால், அவற்றை வாங்குவதற்கான திட்டம் என்ன ? அதற்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ? எவ்வளவு ஆண்டுகளில் இந்த மருந்து கிடைக்கும் ? என்பது குறித்தும் அரசு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. பிரதமர் மோடியின் இன்றைய பயணம் மருந்து தயாரிக்கும் திட்டங்களை விரைவுபடுத்த பயன்படும் ஒன்றாக இருக்கும். அவரது பயணம் அப்படியான ஒரு பயனை உருவாகும் பட்சத்தில், விரைவில் இந்தியாவுக்கு தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னர், தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் மிகப்பரந்த ஒரு வலைப்பின்னலை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டின் முன் மது அருந்தியதை கண்டித்த இளைஞர்களுக்கு கத்திக்குத்து… 3 பேர் கைது…

கோவை வீட்டின் முன்பு மது அருந்தியதை கண்டித்த 2 இளைஞர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகளை போலீசார் கைதுசெய்தனர்.

கமலஹாசன் கூட்டணியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி?

திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்தபடியான பெரிய கட்சி காங்கிரஸ் கட்சிதான். அக்கட்சிக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்று பேசப்படுகிறது. திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி...

மாஸ்டர் படக்காட்சிகள் லீக் : ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ்!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படக்காட்சிகள் லீக் ஆனதால் ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...

‘புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’ – மருத்துவர் சாந்தா மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்!

பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற சென்னை - அடையாறு புற்றுநோய் மருத்துவனை தலைவர் சாந்தா இன்று காலமானார். மக்களுக்கு அரும்பணியாற்றிய சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்...
Do NOT follow this link or you will be banned from the site!